சென்னை,
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,
சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் வழக்கமாக இயக்கப்படக் கூடிய புறநகர் மின்சார ரெயில்கள் வரும் 20ம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை 45 நாட்களுக்கு 5, 6 நடைமேடையில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட இந்த 45 நாட்களில் தற்போது உள்ள மின்சார ரெயில் அட்டவணை மாற்றப்பட்டு, தற்காலிக ரெயில் நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. ஞாயிறு தனி நேர அட்டவணை கிடையாது.
நடைமேடை மாற்றப்படுவதால் அதற்கேற்ப ரெயிலின் வருகை/புறப்பாடு மாறுபடும் என்பதால், மேற்கண்ட 45 நாட்களுக்கு மட்டும் தற்காலிக ரெயில் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் அரக்கோணம் செல்லும் ரெயில்களின் நேர அட்டவணை தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.
