சென்னை – ராஜஸ்தான் இன்று மோதல்… பழைய அணிக்கு எதிராக சாம்சன், ஜடேஜா – ரசிகர்கள் எதிர்பார்ப்பு

சென்னை,

19-வது ஐ.பி.எல். கிரிக்கெட்திருவிழா நேற்று முன்தினம் தொடங்கி நடைபெற்று வருகிறது. மே 31-ந்தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. முதல் ஆட்டத்தில் ஐதராபாத் – பெங்களூரு அணிகள் மோதின.

இதில், பெங்களூரு அணி அபார வெற்றி வெற்றது. தொடர்ந்து நேற்று நடந்த 2-வது ஆட்டத்தில் மும்பை-கொல்கத்தா அணிகள் மோதின. இதில், மும்பை அணி வெற்றி பெற்றது. இன்று 3-வது ஆட்டம் நடைபெறுகிறது. இதில், சென்னை அணி ராஜஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இபோட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடக்கிறது.

Also Read
டி20, ஓடிஐ – அறிமுக போட்டியில் ‘ஆட்ட நாயகி’ விருது வென்ற முதல் வீராங்கனை… கெய்லா ரெய்னேக்கே சாதனை
சென்னை - ராஜஸ்தான் இன்று மோதல்... பழைய அணிக்கு எதிராக சாம்சன், ஜடேஜா - ரசிகர்கள் எதிர்பார்ப்பு

11 ஆண்டுகளாக ராஜஸ்தானுக்கு ஆடிய சாம்சனும், 12 ஆண்டுகளாக சென்னை அணிக்காக விளையாடிய ஜடேஜாவும் இப்போது மாற்று அணிக்காக விளையாட இருப்பதை பார்க்க சுவாரசியமாக இருக்கும். இவ்விரு அணிகளும் இதுவரை 31 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. இதில் 16-ல் சென்னையும், 15-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

Source link