சென்னை,
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை வருகிற 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. இதையொட்டி, சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளிலும் 100 சதவீதம் வாக்களிப்பதன் அவசியத்தை வலியுறுத்தி வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ‘தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா’ எனும் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி பல்வேறு வகைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்தவகையில், சென்னை மாநகராட்சி தலைமையிடமான ரிப்பனர் மாளிகை, எழிலகக் கட்டிடம், அண்ணாசாலை மற்றும் கோயம்பேடு மேம்பாலம் அருகில் உள்ளிட்ட முக்கியமான 4 இடங்களில் ‘தேர்தல் திருவிழா-தமிழ்நாட்டின் பெருவிழா’ 100 சதவீதம் வாக்களிப்போம், வாருங்கள் என்கிற தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களுடன் கூடிய ராட்சத பலூன்கள் பறக்கவிடப்பட்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
