சென்னை,
சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்திற்கு ‘சேயோன்’ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் சிறப்பு வீடியோ வெளியாகி கவனம் பெற்றது.
இந்நிலையில், ‘சேயோன்’ தலைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘டபுள் மீனிங் புரொடக்சன்’ நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளது. 2022ஆம் ஆண்டு வெளியான ’மாயோன்’ திரைப்படத்தை தயாரித்த தாங்கள், அதன் இரண்டாம் பாகமாக ‘சேயோன்’ என்ற பெயரில் படம் எடுக்கத் திட்டமிட்டிருந்ததாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஒரே பெயரை பயன்படுத்துவது குழப்பத்தை ஏற்படுத்தும் என தெரிவித்து, அந்தப் பெயரை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
