சேலம்,
சேலம் மாவட்ட த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் சீலநாயக்கன்பட்டி புறவழிச்சாலையில் உள்ள தாளமுத்து நடராஜன் திடலில் இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க 11 சட்டசபை தொகுதிகளில் இருந்து 5 ஆயிரம் நிர்வாகிகள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் த.வெ.க. நிர்வாகிகள் மத்தியில், பிரசார வேனில் நின்றபடி கட்சியின் தலைவர் விஜய் பேசினார்.
இதனிடையே விஜய் பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற மராட்டிய மாநிலத்தை சேர்ந்த வெள்ளிப் பட்டறை தொழிலாளியான சூரஜ் (37) என்பவர், வலிப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சூரஜ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக விஜய் கூட்டம் நடைபெற்ற இடத்தில் கடும் வெயிலால் மயங்கியவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். நிர்வாகிகள் கூட்டம் சாரை சாரையாக வெளியேறியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
