சேவாக், கோலிக்கு பிறகு… வரலாற்றில் இடம் பிடித்த ரிஸ்வி

சென்னை,

ஐபிஎல் 2026 தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடி வரும் இளம் வீரர் சமீர் ரிஸ்வி, தொடர்ந்து 3 போட்டிகளில் ‘ஆட்ட நாயகன்’ (Player of the Match) விருது வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார்.

இதன் மூலம், ஐபிஎல் வரலாற்றில் தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் ஆட்ட நாயகன் விருது பெற்ற 8-வது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

Also Read
ஒரே போட்டியில் இரட்டை சாதனை… பிஷ்னோய் மிரட்டல்
சேவாக், கோலிக்கு பிறகு... வரலாற்றில் இடம் பிடித்த ரிஸ்வி

இதற்கு முன்பு இந்திய வீரர்களில் விரேந்தர் சேவாக் மற்றும் விராட் கோலி மட்டுமே இந்தச் சாதனையை செய்திருந்தனர். தற்போது அந்த பட்டியலில் சமீர் ரிஸ்வி இணைந்துள்ளார்.

இந்த சிறப்பு பட்டியலில் ஜாக் காலிஸ், சேவாக், க்ளென் மேக்ஸ்வெல், ஆரோன் பிஞ்ச், விராட் கோலி, ஜோஸ் பட்லர், ருதுராஜ் கெய்க்வாட் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

2025 மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி இவரை ரூ.95 லட்சம் செலவில் வாங்கியது குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான சிறப்பான ஆட்டத்தால், சமீர் ரிஸ்வி தற்போது கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளார்.

ரிஸ்வியின் கடைசி 3 போட்டிகள்:

பஞ்சாப்புக்கு எதிராக 58* ரன்கள் (2025)

லக்னோவுக்கு எதிராக 70* ரன்கள் (2026)

மும்பைக்கு எதிராக 90 ரன்கள் (2026)

Source link