கட்சி தொடங்கி ஒரு வருஷம் ஆனவங்க நான்தான் முதலமைச்சர்னு சொல்கிறார்கள் என தவெக தலைவர் விஜய்யை மறைமுக அமைச்சர் கீதா ஜீவன் விமர்சித்துள்ளார். இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நாம் கவனமாக உழைக்க வேண்டும் ஏனென்றால் நமது எதிராளி நம்மிடையே கூட குழப்பத்தை உண்டாக்குவார்கள். மதக் கலவரம், ஜாதி கலவரத்தை உண்டாக்க வேண்டும் என்று திட்டமிட்டனர். ஆனால் எல்லாமே தவிடுபிடியாகிவிட்டது நம்மளுடைய முதல்வர் ஸ்டாலின் செயல்பாட்டால். தமிழ்நாட்டில் ஐந்து வருடமாக எந்தவித கலவரமும் இல்லை. குட்டையை குழப்பி மீன் பிடிக்கலாம் என்று நினைத்தனர் இருந்த போதும் அவர்களுக்கு தோல்விதான். கடைசி இப்போது நாங்களும் பெரிய கூட்டணி தான் என்ற ஒரு மாயை உருவாக்கிக் கொண்டு தேர்தலை சந்திக்க வருகின்றனர் என்றார்.
நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?
தொடர்ந்து பேசிய அவர் நான் நான் 96 இருந்து அரசியலில் இருக்கிறேன். வரும் ஆகஸ்ட் மாதம் வந்தால் 30 வருடங்களை நிறைவு செய்கிறேன். உங்களுடைய திராவிட முன்னேற்ற கழகம் தொடங்கி 75 வருடங்கள் முடிந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் ஒரு வருடத்தில் கட்சியை தொடங்கிவிட்டு நான் தான் முதலமைச்சர் நான்தான் முதலமைச்சர்.. என்று கூறி வருகின்றனர்.
ஆனால் பாஜக என்ற வார்த்தையை சொல்லக்கூட பயப்படுகிறார்கள். ஆனால் கரூரில் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரையில் நேரில் சென்று கூட ஆறுதல் தெரிவிக்கவில்லை. இப்போது புதிய கலாச்சாரம் என்னவென்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்காக ஒரு வாகனத்தை அனுப்பி அவர்களை தன்னுடைய பங்களாவிற்கு அழைத்து ஆறுதல் கூறுவது தான் என்று விமர்சித்தார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பெண் பாதுகாப்பை பற்றி பேசுகிறார். ஆனால், அவருடைய வீட்டில் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் பாதுகாப்பு கிடையாது.
விஜய் தன்னுடைய ஜனநாயக படம் ரிலீஸ் ஆகாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. அதற்கு கூட அவருக்கு குரல் கொடுக்கவில்லை. அதை எப்படிப்பட்ட ஜனநாயக ஆட்சி நடத்தப் போகிறார் என எனக்கு தெரியவில்லை என்று கூறினார். பாஜக அரசு நமக்கு பல்வேறு விதமான நெருக்கடிகளை கொடுத்து வருகிறது குறிப்பாக மார்ச் 8ஆம் தேதி சமையல் எரிவாயு கேஸ் சிலிண்டர் விலை உயர்ந்தது. அப்போது தமிழக வெற்றிக் கழக தலைவர்விஜய் மத்திய அரசுக்கு எதிராக எந்த ஒரு எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ஏனென்றால் பாஜகவை பார்த்தால் பயம் என்று கூறினார்.
மேலும், திமுக கூட்டணியில் இருக்க கூடிய இந்திய முஸ்லிம் லீக் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட்,மார்க்சிஸ்ட் கட்சிகள் 100 ஆண்டுகளாக கட்சி. திமுக தலமையிலான மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி மக்களுக்காக வேலை செய்கிறவர்கள். மக்கள் நலனில் அக்கறை உள்ளவர்கள்.ஆகவே கம்யூனிஸ் கட்சி என்பது திமுகவிற்கு ஆலோசனை வழங்கிய கூடிய கட்சியாக உள்ளது. தவறு செய்தால் அதனை தட்டிக் கேட்கும் என்று கூறினார்.நிச்சயமாக யார் வந்தாலும்,திமுக வெற்றி பெறும் என்று கூறினார்.
