சோனியா காந்தியின் உடல்நிலையில் முன்னேற்றம்; விரைவில் வீடு திரும்புவார் – டாக்டர்கள் தகவல்

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவரும், அக்கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நிலை பாதிப்பு காரணமாக கடந்த 24-ந்தேதி இரவு 10 மணியளவில் புதுடெல்லியில் உள்ள சர் கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர்கள் குழுவினர் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் நோய்த்தொற்று பாதிப்புகள் காரணமாக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவருக்கு ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

சோனியா காந்தியின் உடலில் தீவிர பாதிப்புகள் எதுவும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அவரது உடல்நிலையில் தற்போது நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும், அடுத்த ஓரிரு நாட்களில் சோனியா காந்தி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்புவார் என்றும் டாக்டர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link