சோப்பு விளம்பரத்தில் தமன்னா… கர்நாடகாவில் கிளம்பிய எதிர்ப்பு குரல்!

கர்நாடகாவில் அரசு தயாரிக்கும் ஒரு சோப்பு நிறுவனத்தின் விளம்பர தூதராக தீபிகா படுகோனே, ராஷ்மிகா ஆகியோருக்கு அடுத்தபடியாக நடிகை தமன்னா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சோப்பிற்கு பெரிய அளவில் விளம்பரம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக தமன்னாவுக்கு ரூ.6.27 கோடி ஊதியம் வழங்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Also Read
இந்த வாரம் தியேட்டரில் வெளியாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
சோப்பு விளம்பரத்தில் தமன்னா… கர்நாடகாவில் கிளம்பிய எதிர்ப்பு குரல்!

இதற்கிடையில், கர்நாடக அரசின் சோப்பு விளம்பர தூதராக ராஷ்மிகா, ருக்மினி வசந்த், ஸ்ரீநிதி ஷெட்டி, திவ்யா ஸ்பந்தனா உள்ளிட்ட முன்னணி கன்னட நடிகைகள் இருக்கும்போது, அவர்களை நியமிக்காமல் மும்பையைச் சேர்ந்த நடிகையை எதற்காக ஒப்பந்தம் செய்ய வேண்டும்? என்று கன்னட அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் எதிர்ப்பு குரல்கள் வலுத்து வருகின்றன.

இதுகுறித்து கர்நாடக மாநில அமைச்சர் எம்.பி. பாட்டில் கூறுகையில், “தமன்னா நியமனம் முற்றிலும் வணிக ரீதியாக எடுக்கப்பட்ட முடிவு. இதில் எந்த பின்புலமும் இல்லை” என்று தெரிவித்துள்ளார். மேலும், தமன்னா நியமனத்திற்குப் பிறகு சோப்பின் விற்பனை கணிசமாக உயர்ந்திருப்பதையும் அவர் எக்ஸ் (X) தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Also Read
“அதை நினைக்கும் போது இப்பவும் கஷ்டமா இருக்கு”- கண்ணீருடன் பேசிய ஐஸ்வர்யா அர்ஜுன்
சோப்பு விளம்பரத்தில் தமன்னா… கர்நாடகாவில் கிளம்பிய எதிர்ப்பு குரல்!

Source link