சைபர் போலீசார் விசாரணை!
இந்த விவகாரத்திற்கு அரசியல் மற்றும் திரை பிரமுகர்கள் உட்பட பலரும் கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த சூழலில்தான் படத்தை இணையத்தில் வெளியிட்டது யார் என்பது குறித்து தமிழக சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜனநாயகன் பட விவகாரம்!
தவெக தலைவர் நடிகர் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவான படம் ஜனநாயகன். இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபிதியோல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். சுமார் 500 கோடி ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட இந்த திரைப்படம் பொங்கல் அன்று திரைக்கு வர இருந்த நிலையில் சென்சார் போர்டு உரிய தணிக்கை சான்றிதழ் வழங்க கால தாமதம் ஆனதால் தற்பொழுது வரை இந்த படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது..
குறிப்பாக தவெக தலைவர் நடிகர் விஜயின் கடைசி படம் ஜனநாயகன் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த பெரும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படம் கடந்த ஜனவரி 9 -ஆம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால் சென்சார் போர்டு 80 -க்கும் மேற்பட்ட கட்டுகளை வழங்கியதால் இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ஜனநாயகன் திரைப்படத்தின் 5 நிமிட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், குஷ்பூ உள்ளிட்ட பல்வேறு நடிகர் நடிகைகள் தங்களது கண்டனங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்..
அதுமட்டுமின்றி இணையத்தில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை பல்லாயிரக்கணக்கானோர் பதிவிறக்கம் செய்து பார்த்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான படக்குழுவினர் ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் சட்டவிரோதமாக வெளியிட்ட நபர்களை கண்டறிந்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக காவல்துறையில் புகார் அளித்தனர்.. அதுமட்டுமின்றி இணையத்தில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை பொதுமக்கள் யாரும் பதிவிறக்கம் செய்வதோ, பகிர்வதோ சட்டப்படி குற்றம் என்றும் அவ்வாறு பதிவிறக்கம் செய்வோர், சமூக வலைத்தளங்களில் பகிர்வோர் மீது உரிய குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என கேவிஎன் படத்தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிக்கை வெளியிட்டது.
இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட அடையாளம் தெரியாத நபர்கள் மீது தமிழக சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.துப்பாக்கி, பீஸ்ட்டு படங்களைப்போலவே ஜனநாயகன் படத்திலும் இஸலாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது .
