ஜனநாயகன் முழுப்படமும் இணையத்தில் லீக்: விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி 

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய். ஜன நாயகன் திரைப்படம் தனது கடைசிபடம் என அறிவித்துள்ளார்.  பொங்கலையொட்டி ஜனவரி 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. எனினும், சில காட்சிகள் மத உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில் இருப்பதாகக் கூறி சென்சார் சர்டிபிகேட் வழங்காமல் தாமதப்படுத்தியது. 

சென்சார் சர்டிபிகேட் வழங்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு  விசாரணைகளில் இப்படத்தை மறுதணிக்கை செய்ய நீதிமன்றம் உத்தரவு அளித்தது. மும்பையில் வைத்து மறுதணிக்கைக்கான திரைப்படத்தை மத்திய சான்றிதழ் வாரியம் பார்த்துவிட்டதாகக் தெரிகிறது.மேலும், அரசியல் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் படத்தை பார்த்து வெளியீடு தொடர்பாக முடிவெடுக்க சென்சார் கமிட்டி பரிந்துரை செய்தத்து.

இதன்காரணமாக, தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவடைந்தவுடன் மே இரண்டாவது வாரத்தில் ஜன நாயகன் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு இருந்தனர். இந்த நிலையில், நேற்றைய தினம் ஜன நாயகன் திரைப்படத்தின் சில காட்சிகள் இணையத்தில் சட்டவிரோதமாக வெளியானது.இன்று அதிகாலை 3 மணிநேரம் கொண்ட முழுப் படமும் இணையத்தில் வெளியாகியதால் படக்குழுவினரும் ரசிகர்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். 

மேலும், இணையத்தில் வெளியான ஜன நாயகன் படத்தை நீக்கும் முயற்சியில் படக்குழுவினர் தொடர்ந்து  ஈடுபட்டுள்ளனர். காரைக்குடியில் இன்று விஜய் பிரசாரம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவரை முடக்கும் விதமாக ஜனநாயகன் படத்தை இணையத்தில் லீக் செய்துள்ளதாக தவெக தரப்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. 

படத்தை பகிர வேண்டாம்: எச்.வினோத்

சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்த ஜன நாயகன் திரைப்படத்தை யாரும் பகிர வேண்டாம் என்று இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இயக்குநர் எச். வினோத் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “ஒவ்வொரு காட்சியும் ஒருவரின் கனவைச் சுமந்துள்ளது. வெளியீட்டுக்கு முன்பே அது கசிவது மிகப்பெரிய வலியைத் தருகிறது. தயவுசெய்து அதனைப் பகிராமல் ஆதரவளியுங்கள்” என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Source link