'ஜனநாயகன்' – 20 நிமிட காட்சி கட்டா?…தயாரிப்பாளர் தனஞ்செயன் போட்ட பதிவு

சென்னை,

ஜனநாயகன் ரிலீஸ் குறித்து பரவும் வதந்திகளுக்கு தயாரிப்பாளர் தனஞ்செயன் முக்கிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “ஜனநாயகன் திரைப்படம் 20 நிமிடங்கள் குறைக்கப்பட்டு தணிக்கைக்கு சமர்ப்பிக்கப்பட்டதாக பரவும் செய்தி பொய்யானது. படத்தின் எதிர்பார்ப்பை கெடுக்கும் நோக்கில் இத்தகைய வதந்திகள் பரப்பப்படுகின்றனவா என கேள்வி எழுந்துள்ளது. தயாரிப்பாளரிடமிருந்து அதிகாரபூர்வ அறிவிப்பு வரும் வரை எந்த செய்தியையும் பகிர வேண்டாம்” என தயாரிப்பாளர் தனஞ்செயன் பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

விஜய்யின் கடைசி படமான ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை எச். வினோத் இயக்கி உள்ளார். பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கேவிஎன் புரொடக்‌சன் நிறுவனம் தயாரித்துள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு படம் கடந்த மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சென்சார் சான்றிதழ் பிரச்சினை காரணமாக படம் வெளியாகவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இது தொடர்பான வழக்கு தனி நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

Source link