ஜான் பாண்டியனின் தமமுக கட்சி தாமரை சின்னத்தில் போட்டி

சென்னை,

தமிழகத்தில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 23-ந் தேதி சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 4 முனைப்போட்டி நிலவுகிறது. பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. கூட்டணியில், அ.தி.மு.க. 167, பா.ஜ.க. 26, பா.ம.க. 18, அ.ம.மு.க. 11, த.மா.கா. 5, புதிய நீதிக்கட்சி 2, இந்திய ஜனநாயக கட்சி 2, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் 1, புரட்சி பாரதம் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1 என 234 தொகுதிகளிலும் களம் காண்கிறது.

இதன்படி அ.தி.மு.க. கூட்டணியில் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் கட்சிக்கு ராஜபாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தலைமையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகி இருந்தது.

இந்நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியில், ஜான் பாண்டியனின் தமமுக கட்சி தாமரை சின்னத்தில் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அக்கட்சிகான வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தலில் 33 இடங்களில் தாமரை சின்னம் களம் காண உள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link