ராஞ்சி,
ஜார்க்கண்ட் மாநிலம் கும்லா மாவட்டம் ராய்டி கிராமத்தை சேர்ந்த 16 வயதான சிறுமி கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது ஆண் நண்பருடன் கிராமத்திற்கு நடந்து வந்துகொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த 10 பேர் கொண்ட கும்பல் சிறுமியின் ஆண் நண்பரை கடுமையாக தாக்கியுள்ளனர். பின்னர், சிறுமியை ஆள்நடமாட்டமற்ற பகுதிக்கு தூக்கிச்சென்ற கும்பல் அங்கு வைத்து சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
பின்னர், அந்த கும்பலிடமிருந்து தப்பிய சிறுமி தனக்கு நடந்த கொடூரம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.
