ஜித்து மாதவன் மனைவி இயக்கும் படப்பிடிப்பை துவங்கி வைத்த சூர்யா

ரோமஞ்சம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன், நடிகர் பகத் பாசிலை வைத்து ஆவேஷம் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ.150 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.

தற்போது, நடிகர் சூர்யாவின் 47-வது படத்தை ஜித்து மாதவன் இயக்கி வருகிறார்.இப்படத்தில் சூர்யாவுடன், பிரேமலு ஹீரோ நஸ்லேன் மற்றும் நடிகை நஸ்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சுஷின் ஷ்யாம் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில், ஜித்து மாதவனின் மனைவி ஷபினா பபின் பாக்கர் இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதில், நடிகர் சூர்யா கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன் படப்பிடிப்பையும் துவங்கி வைத்துள்ளார்.விழாவில் நடிகர்கள் நஸ்ரியா, சௌபின் சாகிர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Source link