டக்கர் அதிரடி… ஓமன் அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து

புதுடெல்லி,

10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.

தற்போது லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் பி பிரிவில் அங்கம் வகிக்கும் அயர்லாந்து – ஓமன் அணிகள் மோதி வருகின்றன. கொழும்புவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற ஓமன் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி அயர்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்கர், அடுத்து வந்த லார்கன் டக்கர் அதிரடியில் மிரட்டினார். அவர் 51 பந்துகளில் 10 பவுண்டரி, 4 சிக்சருடன் 94 ரன்கள் விளாசினார். இறுதியில் டிலானி (56), மற்றும் டாக்ரெல் (35) அதிரடி காட்ட, அயர்லாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.

அயர்லாந்து தரப்பில் ஷகில் அகமது அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதையடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஓமன் அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Source link