சினிமா டப்பிங் யூனியன் சங்க தேர்தலில் (2026-29) ராதாரவி தலைமையிலான அணி போட்டியிட் டது. ஆனால் அந்த அணியை எதிர்த்து யாரும் வேட்புமனு செய்யாத நிலையில், வேட்பு மனு தாக்கல் செய்திருந்த ராதாரவி அணியை சேர்ந்த 23 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி தலைவராக ராதாரவி, பொதுச்செயலாளராக டி.என்.பி.கதிரவன், பொருளாளராக ஏ.ஷாஜிதா, துணைத்தலைவர்களாக துர்கா சுந் தர்ராஜன், வி.கோபாலகிருஷ்ணன், கே.மாலா, இணைச்செயலாளர்களாக குமரன், முரளி, சாந்தகுமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல செயற்குழு உறுப்பினர்களாக 14 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. இயக்குனர்கள் சங்கம் மற்றும் தொழிலாளர் சம்மேளனம் (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமையில் நடந்த விழாவில் ராதாரவி அணி நிர்வாகிகள் அனைவரும் பதவியேற்று கொண்டனர்.
விழாவில் பேசிய ராதாரவி, “டப்பிங் யூனியன் வளர்ச்சிக்கு தொடர்ந்து முழு மூச்சாக பாடுபடுவேன். சமரசமின்றியும், விருப்பு வெறுப்பு பார்க்காமலும் பதவி வகித்து பணி செய்வேன்” என்றார்.
