டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்பு

சென்னை,

குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான முதன்மைத் தேர்வு கடந்த 8-ந்தேதி நடந்தது. அன்றைய தினம் காலையில் குரூப்-2 ஏ பதவிக்கான பாடங்களுக்கான தேர்வும், பிற்பகலில் குரூப்-2, 2ஏ பதவிகளுக்கான தகுதித்தாள் தேர்வும் அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் ஹால்டிக்கெட் ஒதுக்கியதில் ஏற்பட்ட குளறு படி காரணமாக அன்றைய தினம் நடைபெற இருந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.

பின்னர் அது குறித்த தேர்வு தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, அடுத்த மாதம் (மார்ச்) 15-ந்தேதி ஒத்திவைக்கப்பட்ட அந்த தேர்வுகள் நடைபெற உள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுகள் கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் ஐஏஎஸ் அதிரடியாக இடம் மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். மேலும் 5-க்கும் மேற்பட்ட டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

இந்த நிலையில், டி.என்.பி.எஸ்.சி.யில் புதிய தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக ஸ்ரீ வெங்கடபிரியா ஐ.ஏ.எஸ். பொறுப்பேற்றுள்ளார். குரூப்-2, 2ஏ தேர்வு குளறுபடி காரணமாக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் சண்முகசுந்தரம் மாற்றப்பட்ட நிலையில் கடந்த 14-ம் தேதி வெங்கடபிரியா பொறுப்பேற்றதாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது.

Source link