உதயநிதி பிரச்சாரம் :
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் டிஆர்பி. ராஜாவை ஆதரித்து தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், மன்னார்குடி பெரியார் சிலை அருகே பேசியதாவது:
கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் டெல்டாகாரன் என்று சொல்வதைப் போல நானும் டெல்டா காரன்தான். இந்த முறை டிஆர்பி.ராஜாவை ஒரு லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். மன்னார்குடியின் செல்லப்பிள்ளை என கருணாநிதியால் அழைக்கப்பட்டவர்.
கஜா புயல் கொரோனா காலகட்டத்தில் மக்களோடு மக்களாககுடும்பத்தில் ஒருவராக உங்களோடு இருந்தவர் டி.ஆர்.பி.ராஜா. தொழில் வளர்ச்சியில் இந்தியாவில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உயர்ந்ததற்கு டிஆர்பி.ராஜாவின் முயற்சி தேர்தல் 2026தான் காரணம். தமிழகம் முழுக்க தொழில் வாய்ப்புகளை உருவாக்கி கொடுத்தவர்.
டிஆர்பி.ராஜா. ஆர்பி ராஜாவுக்கு போடும் ஓட்டு அடுத்த தலைமுறை பிள்ளைகளுக்கு போடும் வளர்ச்சிக்கான ஓட்டு. மொத்த துரோக கூட்டமும் ஒன்று சேர்ந்து இங்கு எதிர்கட்சியில் ஒரு வேட்பாளர் நிறுத்தியுள்ளனர். சசிகலாவுக்கு துரோகம் செய்தவர்.
இப்படி துரோக கூட்டம் சேர்ந்து ஒரு வேட்பாளர் நிறுத்தியுள்ளது. ரூ 47 கோடி மதிப்பில் மன்னார்குடி புதிய பஸ் ஸ்டாண்ட், ரூ 260 கோடி மதிப்பில் பாதாள சாக்கடை திட்டம், மன்னார்குடி தொகுதி முழுவதும் 200 சாலைகளை சீரமைத்து கொடுத்துள்ளார்.
அரசு மருத்துவமனை க்கு புதிய 5 மாடி சட்டிடம், சுற்று சாலை, ஆலங்கோட்டையில் 2000 பெண்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க கூடிய ரூ 50 கோடி மதிப்பில் ஜவுளி பூங்கா, டிஜிட்டல் பார்க், 150 கோடி மதிப்பீட்டில் நீடாமங்கலம் மேம்பாலம், இப்படி பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளார்.
மீண்டும் ஆட்சி அமைக்க உள்ள நிலையில் நியோ டைடல் பார்க், சிறப்பு உணவு பூங்கா, டிஜிட்டல் லைப்ரவரியில் அரசு போட்டி தேர்வு பயிற்சி மையம், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கிரிட்டிகள் கேர், சயின்ஸ் பார்க், நிலத்தடி நீரில் உப்பு நீர் கலந்து வருவதை தடுக்க சிறப்பு திட்டம், குடிசை இல்லா மின்னும் மண்ணை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை கொடுத்துள்ளார்.
இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமெனில் வாக்காளர்கள் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும். கடந்த முறை தேர்தல் வாக்குறுதி அளித்தபடி ஆட்சிக்கு வந்த முதல் கையெழுத்தை மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து திட்டத்திற்கு முதலமைச்சர் கையெழுத்திட்டார்.
காலை உணவு திட்டம், அரசு பள்ளியில் படித்து எந்த கல்லூரியில் சேர்ந்தாலும் மாணவர்களுக்கு ஆயிரம் ஊக்கத்தொகை, இலவச லேப்டாப் 10 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது, ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கொடுத்துள்ளோம்.
தேர்தல் வருவதை காரணம் காட்டி நிறுத்த பார்த்த நிலையில் ஐந்தாயிரம் ரூபாய் கொடுத்தவர் முதல்வர் ஸ்டாலின், காலையில் 6.30 மணிக்கு பணம் போட்டார். ஒன்பதரை மணிக்கு எல்லாம் மகளிர் எடுத்து விட்டனர்.
இதற்கு காரணம் மோடியின் மீது உள்ள பயம் தான்.மினிமம் பேலன்ஸ் என்று மோடி எடுத்து விடுவாரோ என்ற பயத்தில் அவ்வளவு முன்னறிவோடு காலை 9.30 மணிக்கே எடுத்து விட்டனர். கலைஞர் உரிமைத்தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்திக் கொடுப்போம் என வாக்குறுதி அளித்துள்ளோம்.
எட்டாம் வகுப்பு வரை காலை உணவு திட்டம் விரிவுபடுத்தப்படும், முதியோர் உதவித்தொகை 2 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்கப்படும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 35 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்படும். முதல்வர் ஆனவுடன் 8 ஆயிரம் ரூபாய் கூப்பன் ஒவ்வொரு வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க வழங்கப்படும்.
நீங்கள் ஒரு எம்எல்ஏவுக்கு வாக்களிக்கவில்லை. டிஆர்பி ராஜா அமைச்சர் ஆவது உறுதி. டெல்லி அணி வெர்சஸ் தமிழ்நாடு அணி, தமிழ்நாடு அணிக்கு நாம்தான் கேப்டன், டெல்லி அணி என்பது மோடி தலைமையில் உள்ள ஒரு அடிமை கூட்டம், தயவுசெய்து மோடியின் அடிமையாக பழனிச்சாமி இருக்க வேண்டாம்.
நீங்கள் முதல்வராக இருக்கும்போது தான் நீட் தேர்வு, உதய் மின் திட்டம் வந்தது, ஜெயலலிதா ஓரளவுக்கு உரிமைக்கு குரல் கொடுத்தார். ஆனால் பழனிச்சாமி ஒன்னாம் நம்பர் அடிமையாக உள்ளார். முரட்டு அடிமையாக உள்ளார். இதையெல்லாம் கேட்போம் என்பதற்காக கடுமையாக திட்டுகிறார்.
ஒரு கட்டத்தில் செத்துப் போ என்று சொல்லிவிட்டார். ஆனால் நாம் அவர் நன்றாக இருக்க வேண்டும். அவர் இருந்து நாம் செய்கின்ற சாதனையை பார்க்க வேண்டும். பதவிக்காக யார் காலையும் பிடிக்கும் அனுபவம் எனக்கு இல்லை. சங்கி கூட்டத்திலும் அடிமையாக இருக்கும் அனுபவம் எனக்கு இல்லை.
சசிகலா காலில் விழுந்தது தவறு இல்லை.ஆனால் அந்த அம்மாவை யார் என்று கேட்டதும் கட்சியை விட்டு நீக்கியதை தான் குறிப்பிட்டேன்.அந்த தம்பி சொன்னது சரிதானே என்று சசிகலாவே நான் சொன்ன கருத்தை ஏற்றுக் கொண்டு விட்டார்.
அடிமை கூட்டத்தை இந்த தேர்தலில் விரட்டி அனுப்ப வேண்டும். அடுத்த முறை 10 முறை தோற்று விட்டேன். இந்த முறை 11 வது முறையாக தோற்கடித்து விடுங்கள் என்றுதான் ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார். பழனிச்சாமி உடன் கூட்டணி வைக்க நான்கு முழம் கயிறில் தூக்கில் தொங்கி விடுவேன் என்று சொன்னவர் பழனிச்சாமியை ஒரு டயர் நக்கி என்று சொன்னவர் இவர்களெல்லாம் சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளனர்.
அடுத்த 12 நாட்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் ஒவ்வொரு பகுதியாக வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஏன் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளிக்க வேண்டும். மீண்டும் அடிமை கூட்டத்துக்கும் சங்கி கூட்டத்திடமும் தமிழகம் சென்று விடக்கூடாது.
அப்படி சென்றால் நாம் வாங்கிய உரிமைகள் அனைத்தும் போய்விடும் என திமுகவுக்கு வாக்கு கேட்க வேண்டும். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி வெற்றியை விட அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
