அகமதாபாத்,
டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி இன்று அகமதாபாத்தில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா – நியூசிலாந்து மோத உள்ளன.
இதனிடையே, டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். தொடர் முழுவதும் (7 ஆட்டங்கள்) ஆடியுள்ள அபிஷேக் சர்மா வெறும் 89 ரன்கள் (0,0,0,15,55,10 மற்றும் 9 ரன்கள்) மட்டுமே எடுத்துள்ளார்.
இந்நிலையில், டி20 உலகக்கோப்பையில் இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மாவை இந்திய அணியில் இருந்து நீக்க வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுனில் கவாஸ்கர் கூறுகையில், இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மாவை இந்தியா அணி நீக்க வேண்டும். இது மிகவும் கடினமான முடிவுதான். அபிஷேக் சர்மா டி20 கிரிக்கெட் தரவரிசையில் நம்பர் 1 வீரர். ஆனால், டி20 உலகக்கோப்பை தொடரில் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவில்லை. அவர் ஒரே பகுதியில் தொடர்ந்து அவுட் ஆகி வருகிறார். அதே பகுதியில் பவுலர்கள் பந்தை வீசி அவரை தவறுசெய்ய தூண்டுகின்றனர். அவர் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ளவில்லை.
இறுதிப்போட்டியில் அபிஷேக் சர்மாவுக்கு பதில் இஷான் கிஷனை தொடக்க வீரராக களமிறக்க வேண்டும். அபிஷேக் சர்மாவை அணியில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதில் ரிங்கு சிங்கை சேர்க்க வேண்டும்
என்றார்.
