டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி: சாதனை படைத்த சஞ்சு சாம்சன்

அகமதாபாத்,

டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.

இந்த போட்டியில் சஞ்சு சாம்சன் முக்கிய பங்களிப்பை அளித்தார். அவர் 46 பந்துகளில் 5 பவுண்டரி, 8 சிக்சருடன் 89 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் அவர் பல சாதனைகளை படைத்துள்ளார். அதன் விபரம்;

* சஞ்சு சாம்சன் டி20 உலகக் கோப்பையில் தொடர்ந்து 3 ஆட்டங்களில் (97 ரன், 89 ரன், 89 ரன்) 80 ரன்களுக்கு மேல் எடுத்த 2-வது வீரர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். ஏற்கனவே இலங்கையின் மஹேலா ஜெயவர்த்தனே 2010-ம் ஆண்டு உலகக் கோப்பையில் இச்சாதனையை செய்துள்ளார்.

* 89 ரன்கள் விளாசிய சாம்சன் டி20 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் அதிக ரன் எடுத்த வீரராக திகழ்கிறார்.

* நடப்பு உலகக் கோப்பையில் சஞ்சு சாம்சன் மொத்தம் 24 சிக்சர் (5 ஆட்டம்) விளாசி சிக்சர் மன்னனாக வலம் வருகிறார். ஒரு உலகக் கோப்பையில் அதிக சிக்சர் அடித்த வீரர் இவர் தான்.

நடப்பு உலகக்கோப்பை தொடரில் 5 இன்னிஸ்களில் விளையாடியுள்ள சஞ்சு சாம்சன், 80.25 சராசரியுடன் 321 ரன்கள் எடுத்துள்ளார். 199 ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் இந்த ரன்களை எடுத்துள்ளார். டி20 உலகக்கோப்பை தொடரின் தொடர் நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source link