டி20 உலகக்கோப்பை: ஜிம்பாப்வேக்கு சவாலான இலக்கு நிர்ணயித்த இலங்கை

கொழும்பு,

10வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, இலங்கையில் நடைபெற்று வருகிறது. தற்போது கொழும்பு மைதானத்தில் நடைபெற்று வரும் 38வது லீக் ஆட்டத்தில் இலங்கை – ஜிம்பாப்வே அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.

அதில் டாஸ் வென்ற இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகா பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரரான பதும் நிசாங்க அதிரடி காட்டினார். அவர் 62 ரன்களில் ஆட்டமிழந்தார். ரத்நாயகே 44 ரன்கள் எடுத்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இறுதியில் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 178 ரன்கள் எடுத்துள்ளது. ஜிம்பாப்வே தரப்பில் மசகட்சா, முசரபாணி, கிரீமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி பேட்டிங் செய்ய உள்ளது.

Source link