சென்னை,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா உள்பட 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. சூப்பர் 8 ஆட்டங்கள் நாளை தொடங்க உள்ளன.
இந்த நிலையில், இன்று நடைபெறும் 40வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஓமன் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறாதது குறிப்பிடத்தக்கது.
