டெல்லி,
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா இந்தியா மற்றும் இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு மோதுகின்றன. லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்8 சுற்றுக்கு தகுதி பெறும்.’ஏ’ பிரிவில் அங்கம் வகிக்கும் நடப்பு சாம்பியன் இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 29 ரன் வித்தியாசத்தில் அமெரிக்காவை தோற்கடித்தது. இந்த நிலையில் இந்தியா தனது 2-வது லீக்கில் ஆப்பிரிக்க அணியான நமிபியாவை டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று (வியாழக்கிழமை) சந்திக்கிறது.
இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற நமீபியா அணியின் கேப்டன் ஜெராக்ட் எராஸ்மாஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்தியா :
சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரின்கு சிங், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், வருண் சகரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா.
நமீபியா :
லூரன் ஸ்டீன்காம்ப், ஜான் ஃப்ரைலின்க், ஜான் நிகோல் லோஃப்டி-ஈடன், ஜெர்ஹார்ட் எராஸ்மஸ், ஜேஜே ஸ்மிட், ஜேன் கிரீன், ரூபன் ட்ரம்பெல்மேன், மலான் க்ரூகர், பெர்னார்ட் ஷால்ட்ஸ், பென் ஷிகோங்கோ, மேக்ஸ் ஹெய்ங்கோ.
