சென்னை,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் 20 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதிபெறும்.இன்று இந்த தொடரில் 3 ஆட்டங்கள் நடைபெற உள்ளது.
*கனடா- நியூசிலாந்து (டி பிரிவு)
இடம்: சென்னை, நேரம்: காலை 11 மணி
*அயர்லாந்து- ஜிம்பாப்வே (பி பிரிவு)
இடம்: பல்லகெலே, நேரம்: பிற்பகல் 3 மணி
*ஸ்காட்லாந்து- நேபாளம் (சி பிரிவு)
இடம்: மும்பை, நேரம்: இரவு 7 மணி.
