கொல்கத்தா,
10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று ஆட்டங்கள் இன்றுடன் நிறைவடைகிறது. 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.
சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ள 8 அணிகளும் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் 1:
இந்தியா
தென் ஆப்பிரிக்கா
வெஸ்ட் இண்டீஸ்
ஜிம்பாப்வே.
குரூப் 2:
இங்கிலாந்து
நியூசிலாந்து
பாகிஸ்தான்
இலங்கை.
ஒவ்வொரு அணியும் தங்கள் குரூப்பில் உள்ள மற்ற அணிகளுடன் ஒரு முறை மோத வேண்டும். டாப் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். நாளை முதல் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்குகிறது.
