புதுடெல்லி,
டெல்லியில் சாந்தினி சவுக் பகுதியில் உள்ள மத வழிபாட்டு தலங்கள் (கோவில்கள்), வரலாற்று பிரசித்தி பெற்ற செங்கோட்டை அருகே பயங்கரவாத தாக்குதல் நடத்துவதற்கான சாத்தியம் உள்ளது என உளவு துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கண்காணிப்பின் கீழ் இவை தொடர்ந்து உள்ளன. இதன்படி சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. கோவிலும் கடுமையாக தாக்குதலுக்கு ஆளாகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் மசூதி ஒன்றில் கடந்த 6-ந்தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிக்கு பழியாக இந்த தாக்குதலை நடத்த அவர்கள் திட்டமிட்டு உள்ளனர் என உளவு துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 10-ந்தேதி டெல்லி செங்கோட்டை மெட்ரோ நிலையம் அருகே நடந்த கார் வெடிகுண்டு தாக்குதலில் சிக்கி 12 பேர் பலியானார்கள். அருகே நிறுத்தி இருந்த பல்வேறு வாகனங்களும் தீயில் எரிந்து விட்டன.
