டெல்லி விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்; இருவர் கைது

டெல்லி,

டெல்லி விமான நிலையத்தில் கஞ்சா கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து கடந்த 19ம் தேதி டெல்லி வந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் தீவிர சோதனை செய்தனர்.

அப்போது, 2 பயணிகள் கொண்டு வந்த பைகளை பரிசோதனை செய்ததில் 10 கிலோ எடை கொண்ட போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து, போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், போதைப்பொருளை கடத்தி வந்த இந்தியாவை சேர்ந்த 2 பயணிகளை கைது செய்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு ரூ.10 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link