தஞ்சை: சிறுமியை கர்ப்பமாக்கிய தொழிலாளி கைது

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் வல்லம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த நவம்பர் மாதம் தனது குடும்பத்தினர் வெளியூருக்கு சென்று விட்டதால் இரவு நேரத்தில் வீட்டில் தனியாக தூங்குவதற்கு அச்சப் பட்டு, அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி விஜயகுமார் (வயது40) வீட்டில் அவருடைய மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கி உள்ளார். அப்போது விஜயகுமார் அந்த சிறுமியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது அந்த சிறுமி 5 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில் சிறுமியை விஜயகுமார் பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து நேற்று வல்லம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

Source link