“தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள்..” – மகளிர் தின வாழ்த்து கூறிய மு..க.ஸ்டாலின்

சென்னை,

சர்வதேச மகளிர் தினம் இன்று “Give To Gain” கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. இதனை ஐக்கிய நாடுகள் சபை “Rights. Justice. Action. For All Women and Girls” என அறிவித்துள்ளது.

இந்நிலையில் முதல்-அமைச்சர் மு..க.ஸ்டாலினின் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

வெல்லும் தமிழ்ப் பெண்களே…

நீங்கள் வெல்வதற்கு உலகும் – உங்களுக்குத் துணை நிற்க திராவிட மாடலும் இருக்கிறது!

தடைகளைத் தகர்த்தெறிந்து தொடர்ந்து முன்னேறுங்கள். உங்களது பயணத்தின் ஒவ்வொரு அடியிலும் உடன்நிற்க நமது திராவிட அரசு இருக்கிறது… அனைவருக்கும் உங்கள் ஸ்டாலினின் உலக மகளிர் நாள் நல்வாழ்த்துகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link