தடை செய்த புகையிலை பொருட்கள் வைத்திருந்தவர் கைது: பைக், பணம் பறிமுதல்

திருநெல்வேலி மாநகரம் சந்திப்பு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போதை பொருட்கள் தடுப்பு பணியில் காவல் துறையினர் ரோந்து சென்றனர். அப்போது சந்திப்பு பகுதியில் ஒரு தனியார் ஸ்வீட்ஸ் கடை அருகில் இரு சக்கர வாகனத்தில் வந்த சிந்துபூந்துறையை சேர்ந்த ரவிசங்கர் (வயது 49) என்பவரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர்.

அதில் அவரிடமிருந்து அரசால் தடை செய்யப்பட்ட உயிருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய சுமார் 2 கிலோ 820 கிராம் எடையுடைய புகையிலை பொருட்கள், இரு சக்கர வாகனம், செல்போன், பணம் ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து நெல்லை சந்திப்பு காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து, ரவிசங்கரை கைது செய்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Source link