தண்ணீர் கேட்பதுபோல் நடித்து பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

ஐதராபாத்,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் லட்சுமி. இவர், விவசாய நிலத்தில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரின் வீட்டுக்கு அருகில் ஆழ்துளை கிணறு உள்ளது. அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளார்.

உடனே கணவர் தண்ணீர் எடுப்பதற்காக ஆழ்துளை கிணறுக்கு சென்றார். அந்த நேரத்தில் மர்மநபர் திடீரென லட்சுமி அணிந்திருந்த தங்கச் சங்கிலி யைப் பறிக்க முயன்றார். லட்சுமி தங்கச் சங்கிலியை இறுக்கமாக பிடித்துக் கொண்டார். சங்கிலி அறுந்து ஒரு பகுதி மர்மநபர் கையிலும், மற்றொரு பகுதி லட்சுமி கையிலும் சிக்கி கொண்டன.

உடனே மர்மநபர் அங்கிருந்து தப்பி சென்றார். அந்தச் சங்கிலியின் மதிப்பு ரூ.3 லட்சம் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. இதுகுறித்து லட்சுமி கங்கவரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்மநபரை தேடி வருகின்றனர்.

Source link