அகமதாபாத்,
டி20 உலகக்கோப்பையின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அபார வெற்றி பெற்றதுடன், சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,
இந்திய கிரிக்கெட்டில் நீண்ட காலமாக தனிநபர்களின் சாதனை மைல்கல் குறித்து பேசுகிறோம். ஆனால் நான் பயிற்சியாளராக இருக்கும் வரை மைல்கல் குறித்து பேசப்போவதில்லை. சஞ்சு சாம்சன் கடைசி 3 ஆட்டங்களில் சதத்தை நோக்கி ஆடாததே அதற்கு உதாரணம். அவர் சதம் எடுக்க வேண்டும் என்ற நோக்கில் விளையாடி இருந்தால் நாங்கள் 250 ரன்களுக்கு மேல் எடுத்தி ருக்க மாட்டோம். கிரிக்கெட் என்பது ஒரு அணி விளையாட்டு. அதில் தனிநபர்க ளின் சாதனை முக்கியமல்ல. எனவே தனிப்பட்ட வீரர்களின் சாதனையை கொண்டாடுவதை நிறுத்தி விட்டு, வெற்றிக் கோப்பைகளை கொண்டாடுங்கள். சூர்யகுமார் போன்ற வீரர் கேப்டனாக கிடைத்திருப்பது அதிர்ஷ்டம். அவரும் அணியின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்கக்கூடியவர்’ என்றார்.
