சென்னை,
நடிகர் தனுஷ், ஐசரி கணேஷ் தயாரிப்பில் போர்த்தொழில் பட இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கும், ’கர’ படத்தில் நடிக்கிறார். அதனை தொடர்ந்து அமரன் பட இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தனது 55வது படத்தில் நடிக்க உள்ளார்.
தனுஷின் வுண்டர்பார் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சாய் அபயங்கர் இசையமைக்கிறார். மேலும் பிரபல மலையாள நடிகர் மம்முட்டி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்துள்ளதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தனுஷ் 55 படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பணிகள் விரைவில் சென்னை ஈசிஆர் பகுதியில் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படப்பிடிப்பில் நடிகர் மம்முட்டி கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
