தமிழகத்தின் 6 புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள்.. -நாடாளுமன்றத்தில் பதவியேற்பு! – tamil nadu rajya sabha 6 new members swearing in parliament

தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட 6 உறுப்பினர்களின் பதவி காலம் வரும் ஏப்ரல் 2-ம் தேதியுடன் முடிவடைந்தது. அதில் திமுகவை சேர்ந்த திருச்சி சிவா, என். ஆர். இளங்கோவன், அந்தியும் செல்வராஜ், கனிமொழி சோமுவும், அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் உள்ளிட்டவர்களின் பதவிக்காலம் முடிவடைந்தது.

தமிழக மாநிலங்களவை தேர்தல் 2026

இந்த சூழலில் தமிழ்நாடு உள்ளிட்ட நாடு முழுவதும் 10 மாநிலங்களில் காலியாக உள்ள 37 மாநிலங்களவை இடங்களுக்கு கடந்த மார்ச் 16ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காக வேட்பமான தாக்கல் மார்ச் மாதம் தொடக்கத்தில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து மார்ச் 5ஆம் தேதி வேட்பு மனு நிறைவடைந்தது.

நெருக்கடியில் திமுக! கூட்டணி என்னாகும்?

இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை இடங்களில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து 4 இடங்கள் திமுகவுக்கும், இரண்டு இடங்கள் அதிமுகவுக்கும் ஒதுக்கப்பட்டது. இந்த முறை திமுக கூட்டணியில் முதன் முறையாக கூட்டணி வைத்து தேமுதிக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு தலா ஒரு மாநிலங்களவை இடம் வழங்கப்பட்டது. அதேபோல் அதிமுக தரப்பிலும் பாமகவுக்கு ஒரு இடம் வழங்கப்பட்டது.

திமுக அதிமுக மாநிலங்களவை இடங்கள்

தொடர்ந்து அதிமுகவும் திமுகவும் தங்களது வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்தது. அதன்படி திமுக சார்பில் திருச்சி சிவா மற்றும் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர். மேலும் அதிமுக சார்பில் தம்பி துரையும் காங்கிரஸ் சார்பில் கிறிஸ்டோபர் திலக் மற்றும் பாமக சார்பில் அன்புமணி, தேமுதிக சார்பில் எல்.கே .சுதிஷ் போட்டியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 6 பேரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

இதனையடுத்து, இன்று நாடாளுமன்றத்தில் துணைக் குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன் முன்னிலையில் தமிழகத்தை சேர்ந்த 6 பேரும் தமிழிலில் உறுதி மொழிகூறி, பதவியேற்றுக் கொண்டனர். திமுகவின் கான்ஸ்டண்டைன் ரவீந்திரன், காங்கிரஸின் கிறிஸ்டோபர் திலக், தேமுதிகவின் எல்.கே.சுதீஷ், ஆகியோர் முதன்முறையாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு துணைக் குடியரசுத் தலைவர் ராதா கிருஷ்ணன்

புதிய மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவியேற்பு

மேலும், அதிமுகவை சேர்ந்த தம்பிதுரை ஐந்து முறை மக்களவை உறுப்பினராக பதவி வகித்துள்ளார். அதில் இரு முறை மக்களவை துணை தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணியிடம் தோல்வியடைந்தார். பின்னர் 2020 ஆம் ஆண்டு மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டார். அதேபோல் திமுகவை சேர்ந்த திருச்சி சிவா தொடர்ந்து ஆறாவது முறையாக மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாமகவின் அன்புமணியும் மூன்றாவது முறையாக மாநிலங்களவைக்கு செல்ல உள்ள அவர் மத்திய அமைச்சராகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் தமிழகத்தின் கோரிக்கைகளை 6 புதிய மக்களவை உறுப்பினர்கள் குரல் கொடுப்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் மத்திய அரசிடம் இருந்து தமிழகத்திற்கு தேவையான நிதி மற்றும் சிறப்பு திட்டங்களை எவ்வாறு பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Source link