தமிழகத்திற்கு ரூ.5,650 கோடியிலான வளர்ச்சித் திட்டங்களை வழங்கிய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

தமிழகத்திற்கு ரூ.5,650 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை வழங்கிய பிரதமர்!

தமிழகத்திற்கு ஒவ்வொரு முறை வரும்போதும் வளர்ச்சித் திட்டப்பணிகளுக்காகப் பல்லாயிரம் கோடி திட்டங்களை வாரி வழங்கும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இன்று திருச்சிராப்பள்ளியில் ரூ.5,650 கோடி மதிப்பிலான திட்டங்களைத் துவக்கி வைத்துள்ளது பெருமகிழ்ச்சியளிக்கிறது.

1. ரூ.3,680 கோடி மதிப்பீட்டில் நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 8.8 லட்சம் வீடுகளுக்கும் 200-க்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களுக்கும் குழாய் மூலம் இயற்கை எரிவாயு இணைப்புகளை வழங்கும் வகையில் நகர எரிவாயு விநியோக வலையமைப்பு

2. இந்தியாவின் மசகு எண்ணெய் உற்பத்தித் திறனை வலுப்படுத்தும் வகையில் சென்னை மணலியில் ரூ.1,490 கோடி மதிப்பிலான மசகு எண்ணெய் கலவை ஆலை

3. கங்கைகொண்ட சோழபுரம் அருகே பசுமை புறவழிச்சாலை

4. தமிழக கிராமங்களை முன்னேற்றும் வகையில் பிரதமரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ், 370 கி.மீ நீளமுள்ள 89 கிராமப்புற சாலைகள்

5. நெல்லை – மங்களூர் விரைவு ரயில், ராமேஸ்வரம் – மங்களூர் விரைவு ரயில், மயிலாடுதுறை – காரைக்குடி ரயில், நாகர்கோவில் – சர்லாப்பள்ளி அம்ரித் பாரத், கோவை – தன்பாத் அம்ரித் பாரத் என 5 புதிய ரயில் சேவைகள்

என நமது பாரதப் பிரதமரால் இன்று தொடங்கி வைக்கப்பட்ட அனைத்துத் திட்டங்களும் தமிழகத்தின் வளர்ச்சியைப் பன்மடங்காக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை! மதுரை, திருச்சி என முக்கிய நகரங்களுக்கு வருகை தந்து, கடந்த 10 நாட்களுக்குள்ளாகவே ரூ.10,000 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான திட்டங்களைத் தமிழகத்திற்கு வழங்கிய நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தமிழக மக்கள் சார்பாக கோடான கோடி நன்றிகள்!

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link