தமிழகத்தில் இதுவரை அதிகபட்சமாக வேட்புமனுத்தாக்கல் செய்த மாவட்டம்.. எது தெரியுமா? விவரம் இதோ! – do you know which district in tamil nadu has recorded the highest number of candidate nominations so far

தமிழகத்தில் அதிகபட்சமாக வேட்புமனுத்தாக்கல் செய்த மாவட்டம் எது தெரியுமா?இது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வேட்புமனுத்தாக்கல்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது.மே 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு அன்றைய தினமே முடிவுகளும் அறிவிக்கப்பட உள்ளது.சட்டமன்ற தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் கடந்த 30-ம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள்6 ஏப்ரல் 2026 ஆகும். மேலும் வேட்புமனு பரிசீலனை 7 ஏப்ரல் நடைபெற உள்ளது. வேட்பு மனுவைத் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் 9ஏப்ரல் ஆகும்.

விஜய் வேட்புமனு தாக்கல்
 விஜய் வேட்புமனு தாக்கல்

இந்த நிலையில்,தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்காக இதுவரை ஆயிரத்து 361 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கடந்த மார்ச் 30 ஆம் தேதியே முதவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தவெக தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதியிலும், நாதக சீமான் காரைக்குடி தொகுதியிலும், சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் என அடுத்தடுத்து வேட்புமனுத்தாக்கலை செய்து வருகின்றனர்.

புனித வெள்ளி அரசு விடுமுறை
 புனித வெள்ளி அரசு விடுமுறை

இந்த நிலையில், இன்று புனித வெள்ளி அரசு விடுமுறை நாளாக இருப்பதால் வேட்பு மனு தாக்கல் செய்ய முடியாது. எனவே ஞாயிறு கிழமையை தவிர்த்து, நாளை சனி மற்றும் திங்கட்கிழமை ஆகிய நாட்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும்.இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ஆளும் கட்சியாக இருக்கக்கூடிய திமுகவும், எதிர்க்கட்சி அதிமுக, நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட உள்ள தொகுதிகளில் வேட்பு மனுக்களை சமர்ப்பித்து வருகின்றன.

கரூர் சட்டமன்ற தொகுதியில் 45 வேட்புமனுத் தாக்கல்
 கரூர் சட்டமன்ற தொகுதியில் 45 வேட்புமனுத் தாக்கல்

இந்த நிலையில் அதிக வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்ட மாவட்டம் குறித்த தகவலை தேர்தல் ஆணையம் வெளியிட்டு உள்ளது. அதன்படி இதுவரை அதிகபட்சமாக கரூர் சட்டமன்ற தொகுதியில் 45 வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வேட்பமான தாக்கல் செய்ய இன்னும் இரண்டு நாட்கள் உள்ளதால் இந்த எண்ணிக்கையில் வேறுபாடு ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள்
 பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள்

மேலும் பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளர் பட்டியல்கள் என்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வேட்பு மனு தாக்கலுக்கான காலம் குறைவாக இருப்பதால் அனைத்து கட்சிகளும் தங்கள் வேட்பாளர் பட்டியலை இறுதி செய்து விரைவில் வெளியிட உள்ளன. இந்த நிலையில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியாளர்கள் உறுதிப்படுத்தப்பட்டு வேட்பாளர்கள் விவரம் வெளியானால் தமிழக அரசியல் களம் சூடு பிடிக்கும்.