தமிழக உள்துறை செயலாளர் மாற்றம்.. திமுகவின் அடுத்த புகார்.. தேர்தல் ஆணையத்துக்கு டி.ஆர்.பாலு கடிதம்.. – withdraw order transferring home secretary of tamil nadu tr balus write letter to election commission of india

சமீபத்தில் தமிழக உள்துறை செயலாளராக பதவி வகித்து வந்த தீரஜ்குமாரை மாற்றி அவருக்கு பதிலாக கே.மாணிவாசன் என்பவரை புதிய தமிழக உள்துறை செயலாளராக நியமனம் செய்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்து இருந்தது. தற்போது, அந்த உத்தரவை திரும்ப பெறுமாறும், தீரஜ் குமாரையே மீண்டும் உள்துறை செயலாளராக நியமிக்குமாறும் தேர்தல் ஆணையத்திற்கு திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

தேர்தல் அறிவிப்பு வெளியானதும் தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றி தேர்தல் ஆணையம் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை உயர் அதிகாரிகளை மாற்றுவது வழக்கமான ஒன்று தான். அதன் ஒரு பகுதியாகவே, தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ள நிலையில், அதிரடியாகப் பல உயர் அதிகாரிகளை மாற்றம் செய்து இந்திய தேர்தல் ஆணையம் (ECI) உத்தரவிட்டுள்ளது.

அதன் ஒரு பகுதியாகவே, கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி, தமிழக அரசின் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ் மாற்றப்பட்டார். மேலும், தமிழ்நாடு தேர்தல் முடியும் வரை தீரஜ் குமார் எந்தவொரு தேர்தல் சம்பந்தமான பதவியிலும் பணியமர்த்தப்பட மாட்டார் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, தீரஜ் குமாருக்கு பதிலாக தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக கே.மணிவாசன் ஐ.ஏ.எஸ் நியமிக்கப்பட்டார். இவர், இதற்கு முன்னர் நீர்வளத்துறையின் கூடுதல் தலைமை செயலாளராக பணியாற்றி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், எந்த காரணமும் இல்லாமல் தீரஜ் குமாரை மாற்றியதையும், புதிய தமிழக உள்துறை செயலாளர் கே.மணிவாசனை நியமனம் செய்ததையும் கண்டித்து திமுக பொருளாளரும் நாடாளுமன்ற மக்களவைக் குழு தலைவருமான டி.ஆர்.பாலு இந்திய தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில், “தமிழக உள்துறை செயலாளர் தீரஜ் குமார் மாற்றப்பட்டதற்கு உண்டான எந்தவொரு காரணங்களும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவில் இடம்பெறவில்லை.

மேலும், தீரஜ் குமார் குறித்து எந்தவொரு முக்கிய அரசியல் கட்சியும் புகார் கொடுக்கவில்லை. அதுமட்டுமல்லாமல், உள்துறை செயலாளுக்கும் தேர்தல்களை நடத்துவது தொடர்பான பணிகளுக்கும் எந்தவொரு தொடர்பும் இல்லை. அதனால், தேர்தல் பணிகளுடன் தொடர்பில்லாத அரசுப் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்கவோ அல்லது இடமாற்றம் செய்யவோ தேர்தல் ஆணையத்துக்கு எந்தவொரு அதிகாரமும் இல்லை.

அதேப்போல், வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் தேர்தல்களை நடத்துதல் ஆகிய பணிகளை மேற்பார்வையிடுதல், வழிநடத்துதல் மற்றும் கட்டுப்படுத்துதல் ஆகியவற்றுக்கு மட்டுமே தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, எந்தவொரு புகாரும் இல்லாத மாற்றப்பட்ட தீரஜ் குமாரை மீண்டும் தமிழக உள்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்றும், கே.மணிவாசன் நியமன உத்தரவை தேர்தல் ஆணையம் திரும்ப பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

திருப்பரங்குன்றம் விவகாரம் – முன்னாள் அமைச்சர் Jayakumar பதில்!

இதை செய்யவில்லை என்றால் சட்டத்திற்கு உட்பட்டுத் தகுந்த நடவடிக்கைகளை எடுப்போம் என்றும்” குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்பு டி.ஆர்.பாலு லஞ்ச ஒழிப்பு துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் மிட்டலுக்கு எதிராக எழுதிய கடிதத்தை தொடர்ந்து தேர்தல் ஆணையம் அதிரடியாக அவரை மாற்றியதும் குறிப்பிடத்தக்கது.

Source link