தமிழக சட்டசபை தேர்தல்: சென்னைக்கு 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம்

சென்னை,

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.

பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

அதேவேளை, தேர்தல் பணிகளை தேர்தல் ஆணையமும் தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் நாளை மறுதினம் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையிலான அதிகாரிகல் தமிழகம் வர உள்ளனர்.

இந்நிலையில், சட்டசபை தேர்தலை முன்னிட்டு சென்னை மாவட்டத்திற்கு 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் (நோடல் அலுவலர்கள்) நியமிக்கப்பட்டுள்ளனர்.

சென்னையில் உள்ள 16 தொகுதிகளுக்கும் 2 தொகுதிகளுக்கு ஒரு அலுவலர் என்ற விகிதத்தில் 8 தேர்தல் கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும், சென்னை மாநகராட்சி ஆணையருமான குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் கண்காணிப்பு அலுவலர்கள் வாக்காளர் பட்டியல், தேர்தல் நடத்தி விதிகள், தேர்தல் ஏற்பாடுகள் உள்ளிட்ட நடவடிக்கைகளை கண்காணிக்க உள்ளனர்.

Source link