தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: 27 வி.ஐ.பி தொகுதிகளில் நிலவும் அனல் பறக்கும் போட்டி! – 2026 tamil assembly elections 27 vip constituencies leaders in direct contest

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 களம் விறுவிறுபான நிலையில் 27 வி.ஐ.பி தொகுதிகளில் நிலவும் அனல் பறக்கும் போட்டி நிலவி வருகிறது.

2026 சட்டமன்றத் தேர்தல்
தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத வகையில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) என நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், குறிப்பாக 27 தொகுதிகள் ‘வி.ஐ.பி தொகுதிகள்’ என அடையாளப்படுத்தப்பட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளன. இதில் முக்கிய அரசியல் தலைவர்கள், நட்சத்திர வேட்பாளர்கள் மற்றும் வாரிசு அரசியல் பிரமுகர்கள் நேரடியாக மோதுகின்றனர்.

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026: நட்சத்திரத் தொகுதிகளின் வேட்பாளர் பட்டியல்
  • கொளத்தூர்: திமுக சார்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து சந்தானகிருஷ்ணன் (அதிமுக), வி.எஸ். பாபு (தவெக) மற்றும் சவுந்திரபாண்டியன் லூடர் சேத் (நாதக) ஆகியோர் களம் காண்கின்றனர்.
  • எடப்பாடி: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி களம் காணும் இத்தொகுதியில், திமுக சார்பில் காசி, தவெக சார்பில் அருண்குமார் மற்றும் நாதக சார்பில் பிரியதர்சினி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
விஜய்
  • பெரம்பூர்: தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ஜோசப் விஜய் இத்தொகுதியில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆர்.டி. சேகர் (திமுக), திலகபாமா (பாமக) மற்றும் வெற்றித்தமிழன் (நாதக) ஆகியோர் மோதுகின்றனர்.
  • திருச்சி கிழக்கு: தவெக தலைவர் ஜோசப் விஜய் போட்டியிடும் மற்றொரு தொகுதி இதுவாகும். இங்கு திமுகவின் இனிகோ இருதயராஜ் மற்றும் அதிமுகவின் க. ராஜசேகரன் ஆகியோர் முக்கிய எதிரிகளாக உள்ளனர்.
  • காரைக்குடி: நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் களம் காண்கிறார். இவரை எதிர்த்து எஸ். மாங்குடி (காங்கிரஸ்) மற்றும் பிரபு (தவெக) போட்டியிடுகின்றனர்.
உதயநிதி ஸ்டாலின்
  • சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி: துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திமுக சார்பில் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ஆதிராஜாராம் (அதிமுக) மற்றும் டி. செல்வம் (தவெக) களம் காண்கின்றனர்.
  • போடிநாயக்கனூர்: முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் திமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து வி.டி. நாராயணசாமி (அதிமுக) மற்றும் பிரகாஷ் (தவெக) ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
  • சாத்தூர்: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் களம் காண்கிறார். இவரை எதிர்த்து அ. கடற்கரை ராஜ் (திமுக) மற்றும் அஜித் (தவெக) மோதுகின்றனர்.
தமிழிசை சவுந்தரராஜன்
  • ஸ்ரீபெரும்புதூர்: தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து கே. பழனி (அதிமுக) மற்றும் தென்னரசு (தவெக) களம் காண்கின்றனர்.
  • அவினாசி: மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பாஜக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து டாக்டர் கோகிலா மணி (திமுக) மற்றும் கமலி (தவெக) போட்டியிடுகின்றனர்.
  • மயிலாப்பூர்: முன்னாள் ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பாஜக சார்பில் களம் காண்கிறார். இவரை எதிர்த்து தா. வேலு (திமுக) மற்றும் வெங்கட்ரமணன் (தவெக) மோதுகின்றனர்.
பிரேமலதா விஜயகாந்த்
  • விருத்தாசலம்: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் களம் காண்கிறார். இவரை எதிர்த்து டாக்டர் தமிழரசி ஆதிமூலம் (பாமக) மற்றும் விஜய் (தவெக) போட்டியிடுகின்றனர்.
  • தர்மபுரி: பாமக சார்பில் சவுமியா அன்புமணி போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து வி. இளங்கோவன் (தேமுதிக) மற்றும் சிவன் (தவெக) களம் காண்கின்றனர்.
  • காட்பாடி: திமுகவின் மூத்த தலைவர் துரைமுருகன் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து வி. ராமு (அதிமுக) மற்றும் சுதாகர் (தவெக) மோதுகின்றனர்.
வானதி சீனிவாசன்
  • கோவை வடக்கு: பாஜகவின் வானதி சீனிவாசன் களம் காண்கிறார். இவரை எதிர்த்து செந்தமிழ்செல்வன் (திமுக) மற்றும் சம்பத்குமார் (தவெக) போட்டியிடுகின்றனர்.
  • தியாகராய நகர்: தவெக பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து ராஜா அன்பழகன் (திமுக) மற்றும் தி.நகர் சத்தியா (அதிமுக) மோதுகின்றனர்.
  • வில்லிவாக்கம்: தவெக பரப்புரை செயலாளர் ஆதவ் அர்ஜூனா களம் காண்கிறார். இவரை எதிர்த்து கார்த்திக் மோகன் (திமுக) மற்றும் விஜயகுமார் (அதிமுக) போட்டியிடுகின்றனர்.
தமிமுன் அன்சாரி
  • திரு.வி.க நகர்: மறைந்த ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி அதிமுக சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து கே.எஸ். ரவிச்சந்திரன் (திமுக) களம் காண்கிறார்.
  • திருச்செங்கோடு: கொமதேக பொதுச்செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் போட்டியிடுகிறார்.
  • நாகப்பட்டினம்: மநேமக தலைவர் ஜவாஹிருல்லா திமுக கூட்டணியில் களம் காண்கிறார்.
  • சிதம்பரம்: மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி போட்டியிடுகிறார்.
  • சிவகங்கை: முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் களம் காண்கிறார்.
ஜிகே மணி
  • பென்னாகரம்: ஜி.கே. மணியின் மகன் ஜி.கே.எம். தமிழ்குமரன் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
  • மதுரை மத்தி: நடிகர் சுந்தர் சி புதிய நீதிக்கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் (திமுக) களம் காண்கிறார்.
  • ராஜபாளையம்: ஜான் பாண்டியனின் மனைவி பிரிசில்லா பாண்டியன் தமமுக சார்பில் போட்டியிடுகிறார்.
  • விருதுநகர்: விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகர் தேமுதிக சார்பில் போட்டியிடுகிறார்.
  • ராதாபுரம்: சபாநாயகர் மு. அப்பாவு திமுக சார்பில் மீண்டும் களம் காண்கிறார். இவரை எதிர்த்து எஸ்.பி. பாலகிருஷ்ணன் (பாஜக) போட்டியிடுகிறார்.