தமிழக சட்டமன்ற தேர்தல் 2026: வேட்பு மனு தாக்கல் இன்று கடைசி நாள் – தேர்தல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள்! – tamil nadu assembly election nomination filing today last day

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற உள்ளது இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒரே நேரத்தில் மனுதாக்கல் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இன்றுடன் வேட்புமனு தாக்கல் நிறைவு(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா,மேற்கு வங்காளம், அசாம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை கடந்த மார்ச் 15ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் அறிவித்தார். அதன்படி தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23ஆம் தேதி மொத்தல் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

தமிழக சட்டமன்ற தேர்தல்

இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கியது. ஏப்ரல் 6ம் தேதி வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற உள்ளது. மேலும் திமுக, அதிமுக, தவெக, நாதக உள்ளிட்ட கட்சிகளுடன் நான்குமுனைப்போட்டி நிலவ உள்ளது.இதற்காக திமுக 20க்கும் மேற்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துள்ளது. அதிமுக தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைக்கப்பட்டு அன்புமணி தரப்பு பாமக, தவாக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட உள்ளது. வழக்கம் போல் சீமான் தனித்து களம் காண்கிறார். மேலும்,தமிழகத்தில் மாற்று சக்தியாக உருவெடுத்து வரும் தவெக கூட்டணிக்கு அழைப்பு விடுத்தும் எந்த கட்சிகளும் இணையாததால் தனித்து போட்டியிட உள்ளது.

திமுக கூட்டணியில் என்ன நடக்கிறது? ஏன் இப்படி பேசுகிறார்கள்?

இப்படி பரபரப்பான தேர்தல் களத்தில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் செய்யும் நாள் நிறைவு பெற உள்ளதால் தமிழகத்தில் உள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒட்டுமொத்தமாக கடைசி நாளான இன்று தாக்கல் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.அந்த வகையில் கடந்த மார்ச் 30ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் அரசு விடுமுறை நாட்களை தவிர்த்து இதுவரை மூன்று நாட்கள் மனுதாக்கல் நடைபெற்று உள்ளது .மொத்தம் 234 தொகுதிகளில் போட்டியிடுவதற்காக இதுவரை 3,430 பேர் மணிகள் பெறப்பட்டுள்ளன. அதில் ஆண் வேட்பாளர்களிடமிருந்து 200731 மனுகளும் பெண் வேட்பாளர்களிடமிருந்து 698 மனுக்களும் பெறப்பட்டுள்ளது.

காங்கிரஸ்- பாஜக வேட்பாளர்கள் மனு தாக்கல்

குறிப்பாக வில்லிவாக்கம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒரு திருநங்கை வேட்பாளர் வேட்பு மனுதாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனு தாக்கல் செய்து உள்ளன. இதில் மாற்று வேட்பாளராக தங்கள் கட்சி உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினரை மனு தாக்கல் செய்ய வைத்துள்ளன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் மட்டும் 84 வேட்பு மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  • தொண்டாமுத்தூர் தொகுதி -34 மனுக்கள்
  • குளித்தலையில்- 31
  • கோவை தெற்கில்- 30
  • தி.நகரில் -28
  • பர்கூரில்- 29 மனுக்கள்
  • திருச்செங்கோடு -28
  • சேலம் மேற்கு தொகுதி- 28

கோபிசெட்டிபாளையம் தொகுதி , ராயபுரம் தொகுதி, மதுரவாயல் ஆகிய இடங்களில் தலா 27, நாங்குனேரி தொகுதி, பல்லாவரம் தொகுதி, ஆர்.கே.நகர் தொகுதிகளில் தலா 26 வேட்பு மனுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இன்று வேட்புமனுத் தாக்கலுக்கான கடைசி நாள் என்பதால் தேர்தல் அலுவலகங்களில் பல்வேறு அரசியல் கட்சிகள் திரளாக கூட்டம் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்றுடன் வேட்புமனுத்தாக்கல் நிறைவு

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி 28 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக 27 தொகுதிகளிலும் போட்டி இருக்கிறது. இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில் இறுதி நாளான இன்று காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்கள் தங்களது மனுக்களை ஒரே நேரத்தில் வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் இறுதி நாளில் அரசியல் கட்சியினர்களுடன் சேர்ந்து சுயேட்சை வேட்பாளர்களும் அதிக அளவில் மனுதாக்கல் செய்ய வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் தேர்தல் அலுவலகங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது வழக்கமாக காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மனு தாக்கல் செய்ய அனுமதிக்கப்படும் என்று கூட்டம் அதிகரித்தால் வேட்பாளர்களுக்கு டோக்கன் வழங்குமுறையும் பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.