தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவி பதவியில் இருந்து ஹசீனா சையத் திடீர் நீக்கம்.. காரணம் என்ன? – haseena syed removed from post of tamil nadu mahila congress president

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக சுதா ராமகிருஷ்ணன் பதவி வகுத்து வந்திருந்தார். இவர் மக்களை தேர்தலில் மயிலாடுதுறை தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு உள்ளார். இந்நிலையில், கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவியாக ஹசீனா சையத் நியமிக்கப்பட்டார்.

தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹசீனா சையத், இதற்கு முன்பாக மகிளா காங்கிரஸ் தேசிய செயலாளராக பதவி வகித்து வந்தார். இதுமட்டுமல்லாமல், டி.வி. விவாத நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் சார்பில் பங்கேற்று தன் கருத்துகளை முன்வைத்து வந்தார்.

இந்த நிலையில், தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் கட்சியின் தலைவியாக நியமியக்கப்பட்ட 2 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், அந்த பதிவியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார். கட்சி விரோத நடவடிக்கையில் ஹசீனா ஈடுபட்டதால் அப்பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக அகில இந்திய மகளிர் காங்கிரஸ் தலைவி அல்கா லம்பா தெரிவித்துள்ளார்.

தாக்கத்தை ஏற்படுத்துவாரா செந்தில் பாலாஜி! முடிவை தீர்மானிக்கும் TVK, NTK!

யார் இந்த ஹசீனா சையத்?

காங்கிரஸ் பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த ஹசீனா சையத்தின் தந்தை சுதந்திர போராட்ட வீரர் ஆவார். ஹசீனா இளம் பருவத்தில் இருந்தே காங்கிரஸில் பயணித்து வருகிறார். மாணவர் காங்கிரஸ், இளைஞர் காங்கிரஸ் ஆகியவற்றில் முக்கிய பொறுப்புகளை வகித்து இருக்கிறார்.

இதுமட்டுமல்லாமல், 12 ஆண்டுகளாக அகில இந்திய மகளிர் காங்கிரஸில் பணியாற்றி வந்த ஹசீனா சையத், அதில் அகில இந்திய செயலாளராகவும், தமிழக காங்கிரஸ் செய்தி தொடர்பாளராகவும், பல்வேறு மாநிலங்களுக்கான தேர்தல் பொறுப்பாளராகவும் பொறுப்பு வகித்து இருக்கிறார்.

Source link