தமிழரின் பெருமையை உலகறிய செய்தவர் உ. வே. சாமிநாதர் – நயினார் நாகேந்திரன் புகழஞ்சலி

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

அழிவின் விளிம்பில் இருந்த ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளையும் அரிய கையெழுத்துப் பிரதிகளையும் தேடி திரட்டி, அவற்றைச் சீரமைத்து அச்சு வடிவில் மாற்றி நம் தமிழரின் பெருமையை உலகறிய செய்த தமிழ் இலக்கிய வரலாற்றில் அழியாத தடம் பதித்த மகத்தான அறிஞர் உ. வே. சாமிநாதர் பிறந்த நாளை இன்று.

தமிழின் பாரம்பரியம், பெருமை, பண்பாட்டு மரபு ஆகியவை மறைந்து விடாமல் காத்து வளர்த்த பணிக்காக அவர் என்றும் “தமிழ்த் தாத்தா” எனப் போற்றப்படுகிறார்.

தமிழ்மொழிக்காக வாழ்நாளையே அர்ப்பணித்த அவரின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்துவோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link