தமிழ்நாடு காங்கிரஸில் பரபரப்பு: ஜோதிமணி vs செல்வப்பெருந்தகை – என்ன நடக்கிறது? – tamil nadu congress internal clash jyothimani vs selvaperunthagai – whats happening

காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படையும் தன்மையும் இல்லை என தமிழக காங்கிரஸ் தலைமையை நேரடியாக சாடி இருக்கிறார் காங்கிரஸின் எம்.பி ஜோதிமணி.

Lack of transparency alleged in Congress constituency selection by MP Jyothimani(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேலைகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. அனைத்து கட்சிகளும் தொகுதி பங்கீடு பிரச்சாரக் கூட்டம் உள்ளிட்ட பணிகளை தொடங்கி இருக்கின்றன.

திமுக கூட்டணி விவகாரம்

இந்த வகையில் சமீபத்தில்தான் திமுக தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பிரச்சனையை சரிகட்டி இருந்தது. கிட்டத்தட்ட 20 க்கும் மேற்பட்ட கூட்டணி தொகுதிகள் திமுகவில் அங்கம் வகிக்கின்றன. எனவே கூட்டணியில் இருக்கக்கூடிய காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவை எம்பி தொகுதி, தேமுதிகவிற்கு 10 பத்து சீட்டுகள் மற்றும் ஒரு எம்பி தொகுதி, விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 தொகுதிகள், கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா ஐந்து தொகுதிகள், மதிமுகவிற்கு நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கிறது அதில் மூன்று தொகுதிகளில் மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட உள்ளது. இந்த கூட்டணி தொகுதி பங்கீடு விவகாரங்கள் இழுபறியில் நீடித்து வந்த நிலையிலும் கூட்டணி கட்சிகளை சரி கட்டி திமுக வருகிற சட்டமன்ற தேர்தலில் 175 தொகுதிகளில் போட்டியிடப்போகிறது. இப்படிப்பட்ட ஒரு சூழலில்தான் எந்தெந்த தொகுதிகள் எந்தெந்த கட்சியினருக்கு என்ற பேச்சுவார்த்தை வலுத்து வருகிறது. ஏற்கனவே தேமுதிமுகவிற்கு 10 சீட்டுகள் வழங்கியதில் கூட்டணி கட்சிகள் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றன. இப்படிப்பட்ட ஒரு சூழலில் மேலும் எந்த தொகுதி யாருக்கு என்று கேள்வி தீவிரமடைந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சிக்குள்ளும் தொகுதி பிரச்சனை பூதாகரமாக மாறி இருக்கிறது. தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடப்போகிற வேட்பாளர்கள் குறித்தும் எந்தெந்த தொகுதிகளில் அவர்கள் போட்டியிட வேண்டும் என்பது குறித்தும், காங்கிரஸ் கட்சி சார்பில் டெல்லியில் இருக்கக்கூடிய ஸ்கிரீனிங் கமிட்டி நேற்றைய தினம் ஒரு கூட்டத்தை நடத்தி இருக்கிறார்கள். இதற்கிடையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையை சாடும் விதமாக ஒரு எக்ஸ் தள பதிவை பதிவிட்டு இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியின் தொகுதி தேர்வில் எவ்வித வெளிப்படையும் தன்மையும் இல்லை என்பதை குறிப்பிட்ட அவர், வெளிப்படை தன்மையோடும் விரிவான விவாதத்துக்கு பின்பே தொகுதி தேர்வு செய்யப்பட வேண்டும் என்ற தங்களின் கருத்தை பொறுப்பாளர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பகிரங்கமாக தனது எக்ஸ் களத்தில் பதிவிட்டு இருக்கிறார். மேலும் அனைத்துமே மிக ரகசியமாக நடந்து முடிந்ததாக தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் நலன் முழுவதும் சமரசம் செய்யப்பட்டதாக அவர் கூறியிருக்கிறார். அதோடு தங்களைப் போன்ற உண்மையான காங்கிரஸ் தொண்டர்களின் ஆண்டாண்டு கால உழைப்பை தமிழ்நாடு காங்கிரஸ்காக ஒரு சிறு துரும்பை கூட கிள்ளி போட்டிராத சிலர் விற்று திண்பதை பார்க்க வேதனையாக உள்ளது எனவும் அவர் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
மேலும் அந்த பதிவில் இந்த மோசமான சூழலை கேள்வி கேட்காமல் மௌனமாக இருக்க முடியாது எனவும் பொறுப்பாளர்கள், மாநிலத் தலைவர், சட்டமன்ற கட்சி தலைவர் மட்டுமே கட்சி அல்ல எனவும் பகிரங்கமாக தெரிவித்திருக்கிறார். அதோடு லட்சக்கணக்கான தொண்டர்களின் உணர்வும் உழைப்புமே கட்சி என குறிப்பிட்டவர் பட்டியல் வெளியானதும் விரிவாக பேசலாம். இதே விற்பனை அணுகுமுறையோடு தான் வேட்பாளர் தேர்வும் நடக்கும் என்றால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை யாராலும் காப்பாற்ற முடியாது என தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
ஜோதிமணி தமிழ்நாடு காங்கிரஸ் தலைமையையும் அது நிர்வாகத்தையும் கடுமையாக தேர்தல் சாடிஇருக்கிறார். இது கட்சிக்குள் இருக்கும் பூசலை அப்பட்டமாக வெளிக்காட்டுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த முரண்களோடு தேர்தலை சந்திக்கும்போது அது வெற்றி வாய்ப்பை சிதைக்கும் என சொல்லப்படுகிறது.
ஜோதிமணி வெளிப்படையாக தமிழ் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப் பெருந்தகையை குறிப்பிட்டு விமர்சித்திருக்கிறார். இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. திமுக காங்கிரஸ் கூட்டணி உடைந்துவிடும் ம் தருவாயில் இருந்தபோது கூட்டணியை செல்வப் பெருந்தகை தான் இழுத்து பிடித்ததாக சொல்லப்பட்டது. அதுமட்டுமின்றி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்தாலும் திமுகவிற்கு சாதகமாகவே செல்வப் பெருந்தகை பேசுவதாக உள் கட்சிக்குள்ளேயே சில பூசல்கள் நீடித்து வந்தன. அதோடு மட்டுமின்றி திமுக கூட்டணியை விரும்பாத சில காங்கிரஸ் எம்பிக்கள் செல்வப் பெருந்தகையுடன் கருத்து வேறுபாட்டில் நீடித்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது.