தமிழ்நாடு, புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு கோர்ட்டுகளுக்கு விடுமுறை

சென்னை,

தமிழ்நாடு சட்டசபைக்கு வருகிற 23-ந்தேதியும், புதுச்சேரி மாநில சட்டசபைக்கு வருகிற 9-ந்தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் நடைபெறும் இந்த நாட்களில் அனைத்து கோர்ட்டுகளுக்கும் விடுமுறை அறிவித்து சென்னை ஐகோர்ட்டு தலைமை பதிவாளர் நீதிபதி எஸ்.அல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள 2 உத்தரவுகளில், புதுச்சேரி சட்டசபை தேர்தலை முன்னிட்டு, வருகிற 9-ந்தேதி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளுக்கு விடு முறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 23-ந்தேதி நடைபெற உள்ளது. அன்று சென்னை ஐகோர்ட்டு, ஐகோர்ட்டு மதுரை கிளை, மற்றும் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோர்ட்டு களுக்கும், தீர்ப்பாயங்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்படுகிறது” என்ற கூறியுள்ளார்.

Source link