தமிழ்நாடு 2026 சட்டமன்ற தேர்தல்…கடைசி நாளில் நாளில் வேட்புமனுத்தாக்கல் செய்த நட்சத்திரங்கள் லிஸ்ட் – tamil nadu 2026 assembly election list of star candidates who filed nominations on the last day

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்று உள்ளது.

Tamil Nadu Election 2026 Nomination Ends(புகைப்படங்கள்Samayam Tamil)
தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மதியம் 3 மணியுடன் முடிவுக்கு வந்தது. கடந்த மார்ச் 30-ஆம் தேதி தொடங்கிய இந்தச் செயல்முறையில், முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் உட்பட ஆயிரக்கணக்கானோர் தங்கள் மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனர்.

இறுதி நாளில் வேட்பாளர்கள் அலைமோதல்

வேட்புமனுத் தாக்கலுக்கு இன்று கடைசி நாள் என்பதால், காலை முதலே அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் மற்றும் மண்டல அலுவலகங்களில் வேட்பாளர்கள் தங்கள் ஆதரவாளர்களுடன் திரண்டனர். மதியம் 3 மணிக்குள் அலுவலகத்திற்குள் வந்தவர்களுக்கு மட்டும் மனுத் தாக்கல் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.

கடைசி நாளில் வேட்புமனு தாக்கல் செய்தோர்
  • ஓ. பன்னீர்செல்வம்: திமுக ஆதரவுடன் தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில் இன்று மனுத் தாக்கல் செய்தார்
  • நயினார் நாகேந்திரன் (பாஜக): திருநெல்வேலி மாவட்டம் சாத்தூர் தொகுதியில் பாஜக சார்பில் இன்று மனுத் தாக்கல் செய்தார்
  • விஜயதரணி (பாஜக): கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு தொகுதியில் இன்று தனது வேட்புமனுவை அளித்தார்
  • எட்ப்பாடி பழனிசாமி – எடப்பாடி தொகுதி
  • செல்வ பெருந்தகை
  • கருணாஸ்
  • தங்கமணி – குமாரபாளையம் தொகுதி
  • வேட்புமனு தாக்கல் செய்த கையேடு விருதாச்சலத்திற்கு வாக்குறுதி கொடுத்த பிரேமலதா விஜயகாந்த்
  • காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்தார் விசிக வேட்பாளர் ஜோதிமணி.
  • முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் வேட்பு மனு தாக்கல் செய்தார்

நட்சத்திர வேட்பாளர்களின் இறுதி நிலவரம்
  • திமுக: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் (கொளத்தூர்), உதயநிதி ஸ்டாலின் (சேப்பாக்கம்) உட்பட அனைத்து வேட்பாளர்களும் மனுத் தாக்கல் செய்துவிட்டனர்.
  • அதிமுக – பாஜக: எடப்பாடி பழனிசாமி (எடப்பாடி) மற்றும் பாஜகவின் 27 வேட்பாளர்கள் (வானதி சீனிவாசன், எல். முருகன் உட்பட) மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
  • தவெக: கட்சித் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் தனது மனுக்களை ஏற்கனவே தாக்கல் செய்திருந்தார். நேற்று அவர் பெரம்பூரில் தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரம் அவரது மனுவை வலுப்படுத்தியுள்ளது.
  • நாம் தமிழர்: சீமான் காரைக்குடி தொகுதியில் தனது மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
அடுத்த கட்டம் என்ன?

தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை (ஏப்ரல் 7) நடைபெறுகிறது. வேட்புமனுக்களைத் திரும்பப் பெற ஏப்ரல் 9-ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே அனைத்துத் தொகுதிகளுக்குமான இறுதி வேட்பாளர் பட்டியல் மற்றும் சின்னங்கள் ஒதுக்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

தேர்தல் நாள் நெருங்குகிறது

வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை மே 4-ஆம் தேதி நடைபெறும். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், பறக்கும் படையினர் மாநிலம் முழுவதும் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.