தமிழ்நாட்டிற்கு 5 தலைநகரங்கள்: அனைவருக்கும் அரசு வேலை – சீமான் அதிரடி அறிவிப்பு

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார். அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். அதன் விபரம் வருமாறு:-

திருச்சி நிர்வாக தலைநகரம்

தமிழகத்தின் மையப்புள்ளியான திருச்சி முதன்மை நிர்வாக மையமாகச் செயல்படும். தென் மாவட்ட மக்களும், வட மாவட்ட மக்களும் ஒரே நாளில் வந்து செல்லக்கூடிய மையமாக இது இருக்கும்.

(Secretariat):

முதலமைச்சர் அலுவலகம் மற்றும் அனைத்துத் துறை அமைச்சகங்கள்.

L (Legislative Assembly):

மாநிலத்தின் சட்டமியற்றும் பணிகள்.

வருவாய்த்துறை மற்றும் பொது நிர்வாகம்:

மாநிலத்தின் 38 மாவட்டங்களையும் கண்காணிக்கும் மையம்.

மாநிலத் திட்டக் குழு:

ஒட்டுமொத்தத் தமிழகத்தின் வளர்ச்சிக்கான திட்டமிடல்.

சென்னை:

தொழில்நுட்பத் தலைநகரம் (Tech Capital)

இந்தியாவின் மும்பை, சீனாவின் ஷாங்காய் போல. சென்னை தனது நிருவாகப் பளுவைக் குறைத்துக் கொண்டு, கல்வி, பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் நுழைவாயிலாக இருக்கும்.

தகவல் தொழில்நுட்பம் (IT):

கணினித் தொழில்நுட்பம் மற்றும் மென்பொருள் ஏற்றுமதி.

திரைக்கலை மற்றும் ஊடகம்:

கலை மற்றும் பொழுதுபோக்குத் துறையின் தலைமையகம்.

துறைமுகம் மற்றும் கடல்சார் வணிகம்:

சர்வதேச வர்த்தகப் போக்குவரத்து.

நிதி மற்றும் வங்கிச் சேவைகள்:

மாநிலத்தின் முக்கிய நிதி நிறுவனங்கள்.

மாநிலத்தின் முக்கிய நிதி நிறுவனங்கள்.

கோவை: தொழில் மற்றும் வணிகத் தலைநகரம் (Industrial & Business Capital)

ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் அல்லது இத்தாலியின் மிலன் நகரம் போல, கோவை மாநிலத்தின் உற்பத்தித் துறையின் முதுகெலும்பாகச் செயல்படும்.

மேற்கு மண்டலத்தின் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கவும், சிறுகுறு தொழில்களை (MSME) உலகத் தரத்திற்கு உயர்த்தவும் இது உதவும்.

தொழில் மற்றும் வர்த்தகத்துறை:

புதிய தொழிற்சாலைகளுக்கான அனுமதி மற்றும் மேலாண்மை.

நெசவு:

திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட நெசவு மண்டலங்களின் ஒருங்கிணைப்பு.

தொழிற்பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு:

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புப் பயிற்சி மையங்கள்.

தொழில்முனைவோர் மேம்பாட்டு நிறுவனம்: புதிய நிறுவனங்களை உருவாக்குதல்.

மதுரை: மொழி, கலை மற்றும் பண்பாட்டுத் தலைநகரம் (Cultural & Heritage Capital)

ஜப்பானின் கியோட்டோ நகரம் அதன் பண்பாட்டினைப் பிரதிபலிப்பது போல. மதுரையும் தமிழின் அடையாளம் மற்றும் நீதிக்கான மையமாகத் திகழும்.

தமிழர்களின் தொன்மையான வரலாறு மற்றும் கலைகளைப் பாதுகாக்கும் உலகளாவிய மையமாக இது விளங்கும்.

தமிழ் வளர்ச்சித் துறை:

தமிழ் மொழி ஆய்வு மற்றும் உலகத் தமிழ் சங்கப் பணிகள்.

சுற்றுலா மற்றும் பாரம்பரியம்:

மரபுசார் மற்றும் வரலாற்றுச் சுற்றுலா மேம்பாடு.

நாட்டுப்புறக் கலைகள் மற்றும் நுண்கலைகளின் பாதுகாப்பு.

கன்னியாகுமரி: தமிழர் மெய்யியல் தலைநகரம் (Epistemological Capital)

இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள குமரி, மாநிலத்தின் தொலைநோக்குச் சிந்தனை மற்றும் இயற்கை வளப் பாதுகாப்பிற்கான மையமாக இருக்கும்.

தமிழரின் மெய்யியல் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்களை இணைக்கும் ஒரு அடையாளப் புள்ளியாக இது விளங்கும்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம்:

கடல்சார் சுற்றுச்சூழல் மற்றும் கடற்கரை மேலாண்மை.

வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை:

புலம்பெயர்ந்த தமிழர்களுடனான உறவை மேம்படுத்துதல்.

சிந்தனை மற்றும் தத்துவ மையம்:

வள்ளுவம் உள்ளிட்ட தமிழர் அறநெறிகளை உலகிற்குக் கொண்டு சேர்த்தல்.

பெண்களுக்குத் தனித்தொகுதி

உள்ளாட்சி அமைப்பில் பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டமன்ற நாடாளுமன்றத் தொகுதிகளில் அப்படி வழங்கப்படவில்லை. ஒரு பெண் வேட்பாளர் போட்டியிடும் தொகுதியில் மற்ற கட்சிகளும் பெண் வேட்பாளரை நிறுத்துவதில்லை. இதனால் பெண்களுக்கான உரிமையும் பறிக்கப்படுகிறது. எனவே பெண்களுக்குச் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் (பட்டியலினத்தவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதைப் போல்) தனித்தொகுதிகள் போராடிப் பெறப்படும். இதனால் பட்டியலின, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பெண்களுக்கான நிகர்நிலைக் கிடைக்கும்.

மேலும் விவரங்களுக்கு…

நாம் தமிழர் கட்சி தேர்தல் அறிக்கை: முழு விவரம்

Source link