தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும் நாள்…. இன்றைய ராசிபலன் – 13.04.2026

இன்றைய பஞ்சாங்கம்:-

கிழமை: திங்கட்கிழமை

தமிழ் வருடம்: விசுவாவசு

தமிழ் மாதம்: பங்குனி

நாள்: 30

ஆங்கில தேதி: 13

மாதம்: ஏப்ரல்

வருடம்: 2026

நட்சத்திரம்: இன்று பிற்பகல் 01.22 வரை அவிட்டம் பின்பு சதயம்

திதி: இன்று இரவு 10.26 வரை ஏகாதசி பின்பு துவாதசி

யோகம்: சித்த யோகம்

நல்ல நேரம் காலை: 6.30 – 7.30

நல்ல நேரம் மாலை: 4.30 – 5.30

ராகு காலம் மாலை: 7.30 – 9.00

எமகண்டம் காலை: 10.30 – 12.00

குளிகை காலை: 1.30 – 3.00

கௌரி நல்ல நேரம் காலை: 09.30 – 10.30

கௌரி நல்ல நேரம் மாலை: 7.30 – 8.30

சூலம்: கிழக்கு

சந்திராஷ்டமம் : பூசம், ஆயில்யம்

ராசிபலன்:-

மேஷம்

பெண்களின் திருமண கனவு நிறைவேறும். மாணவர்களின் எண்ணம் ஈடேறும். மனைவியிடம் கோபப்படாமல் அமைதியை கையாளவும். மற்றவர்களின் ஆலோசனை நிம்மதியை வரவழைக்கும். அலைபேசியில் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க வேண்டாம். இளைஞர்களுக்கு திருமண முயற்சிகள் தாமதமாகும்.

ரிஷபம்

உத்யோகஸ்தர்களுக்கு வேலைபளு குறையும். தம்பதிகளின் வாழ்வில் வசந்தம் வீசும். காதல் கசக்கும். ஆண்களுக்கு திருமண பேச்சு வார்த்தை தள்ளிப் போகும். பெண்களுக்கு பொறுமை அவசியம். கலைஞர்களுக்கு பாராட்டுகள் குவியும். இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் வரும். உடல் நலம் சிறக்கும்.

மிதுனம்

வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அரசியல்வாதிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். மார்கெட்டிங் பிரிவினர் புது ஆர்டர்கள் எடுப்பீர்கள். மனை வாங்கும் முயற்சி வெற்றியாகும். பெற்றோர்களின் உடல் நலம் சிறக்கும். மாணவர்கள் ஆடம்பரச் செலவுகளை தவிருங்கள்.

கடகம்

இன்று சந்திராஷ்டமம் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். யாரிடமும் வாக்குவாதங்கள் செய்ய வேண்டாம் மனக்குழப்பங்கள் ஏற்படும் என்பதால் மிகவும் கவனம் தேவை. இறைவனை மட்டும் பிரார்த்திப்பது நல்லது. பல காரியதடைகள் இருப்பதால் புதிய முயற்சிகளை எடுக்காமல் இருப்பது நல்லது.

சிம்மம்

சிலருக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும். ஷேர் மூலம் பணம் வரும். அரசியல்வாதிகளுக்கு தங்கள் கட்சித் தலைவரின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு நல்ல பொறுப்பு கிடைக்கும்.

கன்னி

திடீர் பயணங்கள் வந்துப் போகும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்துக் கொள்வார்கள். தம்பதியரிடையே அன்பு மேலோங்கும். காதலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பது நல்லது. மாணவர்கள் நன்கு படித்து முன்னேறுவர்.

துலாம்

உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு தேடி வரும். பழைய பிரச்சனைகள் தலைதூக்கும் நிதானம் தேவை. சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். சுப காரியம் கைகூடும். நட்பு பலப்படும்.

விருச்சிகம்

வீடு வாங்கும் முயற்சி பலிக்கும். தம்பதிகளிடையே பிணக்கம் நீங்கும். பணத்திற்கு குறைவு ஏற்படாது. நண்பர்களிடம் தங்கள் அந்தரங்க விசயத்தை பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது அனைத்து விதத்திலும் நல்லது. அரசியல்வாதிகளுக்கு கட்சியில் நல்ல பொறுப்பு கிடைக்கும். தெய்வீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.

தனுசு

உறவினர்களால் நன்மை உண்டாகும் அண்டை வீட்டாரிடம் நட்பு பலப்படும். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். நண்பரின் உதவி கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு கூடும். அரசியல்வாதிகளின் எண்ணம் பலிக்கும். வியாபாரிகள் வாடிக்கையாளர்களிடம் ஆத்திரப்படாதீர்கள். பொறுமையை கையாள்வது நன்மையைத் தரும்.

மகரம்

வீடு வாங்கும் திட்டம் நிறைவேறும். தாங்கள் விரும்பிய இடத்திலேயே அமைந்து விடும். வெளியூர் வெளிநாட்டு நபர்களால் ஆதாயம் உண்டு. அவர்களின் நட்பால் தங்கள் வியாபாரம் பெருகும். தம்பதிகளுக்குள் அன்பு பெருகும். வீட்டிற்கு தேவையான நவீன தொழில் நுட்ப பொருட்களை வாங்குவீர்கள்.

கும்பம்

நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மதிப்பார்கள். பெண்களுக்கு கருப்பை பிரச்சினை வரக்கூடும் இயற்கை வைத்தியத்தை நாடுவது நல்லது. வாகனச் செலவு வந்துச் செல்லும். ஆலயங்களை புதுப்பிக்க உதவுவீர்கள். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைத்து வியாபாரத்தினை விரிவுபடுத்துவர்.

மீனம்

உத்யோகஸ்தர்களுக்கு தன் கீழ் உள்ள பணியாளர்களிடம் இருந்து ஒத்துழைப்பு கூடும். வெளிநாட்டு நண்பர்கள் தங்களுக்கு உதவுவர். வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட கூடுதல் முயற்சி அவசியம். அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். கூடுமானவரை சிக்கனமாக இருக்க வேண்டும்.ஆரோக்கியம் மேம்படும்.

Source link