”தயவு செஞ்சு லீக் ஆன படத்தை போய் பாக்காதீங்க”- ஜனநாயகன் படத்திற்கு 'டிஎன் 2026' படக்குழு ஆதரவு.!

சென்னை,

தவெக தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜனநாயகன் படம் இணையதளத்தில் சட்ட விரோதமாக கசிந்துள்ளது. ரிலீசுக்கு முன்பே படத்தின் முழு நீள காட்சிகளும் இணையத்தில் கசிந்தது பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் விஜய் ரசிகர்களுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கேவிஎன் நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில் தமிழக சைபைர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஜனநாயகன் படம் இணையத்தில் கசிந்தது தொடர்பாக திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் தம்பி ராமையா, “ஒரு விவசாயி விதை விதைத்து, நாற்று நடவு செய்து, பாதுகாத்து, அறுவடைக்காக காத்திருக்கும் நேரத்தில் திடீரென காட்டுப்பன்றி நுழைந்து சேதப்படுத்தினால் எப்படி வேதனை இருக்கும், அதே உணர்வே ‘ஜனநாயகன்’ படக்குழுவினருக்கும் இருக்கும். இணையத்தில் கசிந்துள்ள படத்தை விஜய்யின் ரசிகர்கள் பார்க்காமல் தவிர்த்து வருகின்றனர். அதை பார்த்தால் நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் அனைவரும் மனவேதனை அடைவார்கள் என்பதை அவர்கள் உணர்ந்துள்ளனர். அவர்களின் பாதம் தொட்டு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். அவர்கள் தான் சினிமாவை காப்பாற்றுகிறார்கள்” என்றார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் நட்டி நட்ராஜ், “இணையத்தில் லீக் ஆன படத்தை தயவு செய்து யாரும் பார்க்காதீர்கள், பகிராதீர்கள். அந்த படத்தில் பலரின் கடின உழைப்பும் உள்ளது. மிகப்பெரிய செலவில் உருவாக்கப்பட்ட இப்படம், இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. எங்களின் அன்பான வேண்டுகோள் – லீக் ஆன படத்தை பார்க்கவும் வேண்டாம், பகிரவும் வேண்டாம்” என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Source link