தவெகவில் இத்தனை பெண் வேட்பாளர்களா? ஸ்டாலினுக்கே டஃப் கொடுத்த விஜய்… முழுவிவரம் இதோ – so many women candidates in tvk vijay gives tough competition even to m k stalin

தமிழக வெற்றிக் கழகத்தின் பெண் வேட்பாளர்கள் பட்டியலை இந்த கட்டுரையில் காணலாம்

TVK Women Candidates List 2026(புகைப்படங்கள்Samayam Tamil)
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சார்பில் 23 பெண் வேட்பாளர்களுக்கு கட்சித் தலைவர் விஜய் வாய்ப்பளித்து உள்ளார். இன்று (மார்ச் 29, 2026) சென்னை நகரில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில், 234 தொகுதிகளுக்குமான முழுமையான பட்டியலை அவர் வெளியிட்டார். இதில், ஆளும் திமுக அறிவித்த 18 பெண் வேட்பாளர்களை விட அதிகமாக பெண்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பது அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெறுகிறது. பெண்களின் அரசியல் பங்கேற்பை உயர்த்தும் நோக்கத்துடன் எடுத்த இந்த முடிவு, தேர்தல் அரசியலில் புதிய அணுகுமுறையாக பார்க்கப்படுகிறது.
அறிவிக்கப்பட்ட 23 பெண் வேட்பாளர்களில், பல முக்கிய தொகுதிகளில் போட்டியிடும் சில முக்கியப் பெயர்கள் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்த்துள்ளன.

விஜய் போட்ட உத்தரவு…சரியான திசையில் நகர்வு!

தவெக பெண் வேட்பாளர்கள் – 23 பேருக்கு வாய்ப்பு

  1. சத்தியமா – திருப்பூர் வடக்கு
  2. விஜயலட்சுமி – குமாரபாளையம்
  3. பல்லவி – திருவிக நகர்
  4. காமாட்சி – பல்லாவரம்
  5. தாகிரா – ராணிப்பேட்டை
  6. சிந்து – குடியாத்தம்
  7. திலகவதி – பாப்பிரெட்டிப்பட்டி
  8. சுஜாதா – செங்கவல்லி
  9. விஜயலட்சுமி – ஏற்காடு
  10. கொளரி சித்ரா – தராபுரம்
  11. கலைச்செல்வி – பவானி சாகர்
  12. கமலி – அவிநாசி
  13. கனிமொழி – கவுண்டம்பாளையம்
  14. கலைச்செல்வி – ஆத்தூர்
  15. நாகஜோதி – வேடசந்தூர்
  16. ரேவதி – குன்னம்
  17. சிந்தாமணி – திருவமயம்
  18. குழுந்தை ராணி நாச்சியார் – சிவகங்கை
  19. ஜெகத்ஸ்லவி – ராஜபாளையம்
  20. மல்லிகா – முதுகுளத்தூர்
  21. எமில் கேத்ரின் – மதுராந்தகம்
  22. அமுதராணி – வாசுதேவ நல்லூர்
  23. கீர்த்தனா – சிவகாசி